ஆம்ஸ்டல்வீன்: உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவு 2-வது சுற்றில் நேற்று இந்திய அணி, நடப்பு சாம்பியனான நெதர்லாந்துடன் மோதியது.
இதில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் டெல்ஜென்காம்ப் டுக்கோ (41-வது நிமிடம்), செப் ஹூடேமேக்கர்ஸ் (51-வது நிமிடம்), வான் டாம் தையிஸ் (55-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் 52-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். இந்த தோல்வியால் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.