இலங்கை அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன்.

 
விளையாட்டு

இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி

செய்திப்பிரிவு

ஆசிய விளை​யாட்​டில் ஆடவர் கிரிக்​கெட் போட்​டி​யின் அரை இறு​தி​யில் நேற்று இந்​தியா - இலங்கை அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த இந்​திய அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 169 ரன்​கள் குவித்​தது. இஷான் கிஷன் அதிரடி​யாக விளை​யாடி 46 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 80 ரன்​கள் விளாசி​னார்.

வைபவ் சூர்​ய​வன்ஷி 21 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​களும், கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 13 ரன்​களும் சேர்த்​தனர். அபிஷேக் சர்மா 7, சஞ்சு சாம்​சன் 7, அக்​சர் படேல் 8, திலக் வர்மா 2, ஷிவம் துபே 3 ரன்​களில் நடையை கட்​டினர்.

170 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இலங்கை அணி 9.5 ஓவர்​களில் 45 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக நுவனிந்து பெர்​னாண்டோ 15 ரன்​கள் சேர்த்​தார். மற்ற எந்த பேட்​டரும் இரட்டை இலக்க ரன்னை எட்​ட​வில்​லை.

இந்​திய அணி தரப்​பில் ஜஸ்​பிரீத் பும்​ரா, அக்​சர் படேல், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 124 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி நாளை (3-ம் தேதி) பாகிஸ்​தானுடன் மோதுகிறது.இலங்கை அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன்.

SCROLL FOR NEXT