ஜலந்தர்: ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியை தோற்கடித்தது. பஞ்சாபின் ஜலந்தரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானைத் தோற்கடித்தது. இந்திய அணி தரப்பில் அபிஷேக் நைன் 2 கோல்களும், விஷ்ணுகாந்த் சிங், ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். ஜப்பான் தரப்பில் ஷோட்டாயமாடா ஒரு கோலடித்தார்.