விளையாட்டு

ஆசிய விளை​யாட்டு ஆடவர் ஹாக்கியில் இந்தியா தங்கம் வென்று அசத்தல்

2028-ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

செய்திப்பிரிவு

ககமிகஹாரா: ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஆடவருக்​கான ஹாக்கி இறு​திப் போட்​டி​யில் நடப்பு சாம்​பிய​னான ஹர்​மன்​பிரீத் சிங் தலை​மையி​லான இந்​திய அணி நேற்று மலேசி​யா​வுடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 5-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி வெற்றி பெற்று தங்​கப் பதக்​கம் வென்​றது. இதன் மூலம் வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் நடை​பெற உள்ள ஒலிம்​பிக் போட்​டிக்கு இந்​திய ஆடவர் அணி தகுதி பெற்​றது.

நேற்று முன்​தினம் இந்​திய மகளிர் ஹாக்கி அணி இறு​திப் போட்​டி​யில் சீனாவை வீழ்த்தி 44 வருடங்​களுக்கு பிறகு தங்​கப் பதக்​கம் வென்​றதுடன் ஒலிம்​பிக் போட்​டிக்​கும் தகுதி பெற்​றிருந்​தது. ஆசிய விளை​யாட்டு வரலாற்​றில் ஹாக்​கி​யில் ஆடவர் மற்​றும் மகளிர் பிரி​வில் இந்​தியா தங்​கப் பதக்​கம் வெல்​வது இதுவே முதன்​முறை​யாகும்.

இந்​திய அணி தரப்​பில் ஹர்​மன்​பீரித் சிங் 2 கோல்​களும் (11, 57-வது நிமிடங்​கள்) ஜுக்​ராஜ் சிங் (23-வது நிமிடம்), ஹர்​திக் சிங் (42-வது நிமிடம்), ஷில்​லானந்த் லக்ரா (54-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்​தனர். மலேசியா அணி சார்​பில் 14-வது நிமிடத்​தில் ஷெல்லோ சில்​வேரியஸ் கோல் அடித்​தார்.

இந்த வெற்​றி​யின் மூலம், ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளின் வரலாற்​றில் ஹாக்​கி​யில் தொடர்ந்து இரண்டு முறை தங்​கப் பதக்​கம் வென்ற 2-வது அணி என்ற பெரு​மையை பெற்​றது இந்​திய ஆடவர் அணி. இதற்கு முன்​னர் பாகிஸ்​தான் அணி தொடர்​சி​யாக 2 முறை சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்​தது. மேலும் 2 ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் தங்​கப் பதக்​கங்​களை வென்ற முதல் இந்​திய கேப்​டன் என்ற பெரு​மையை ஹர்​மன்ப்​ரீத் சிங் பெற்​றார்.

5-வது முறை​யாக தங்​கம்

ஆசிய விளை​யாட்டு போட்டி ஆடவர் ஹாக்​கி​யில் இந்​தியா தங்​கப் பதக்​கம் வெல்​வது இது 5-வது முறை​யாகும். இதற்கு முன்​னர் 1966, 1998, 2014 மற்​றும் 2023-ம் ஆண்​டு​களி​லும் இந்​திய அணி தங்​கப்​ பதக்​கம்​ வென்​றிருந்​தது.

ஆசிய விளையாட்டு இன்றுடன் நிறைவு

20-வது ஆசிய விளை​யாட்டு போட்டி ஜப்​பானின் ஐச்​சி-நகோயா மாகாணத்​தில் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. 46 நாடுகளை சேர்ந்த 10,787 வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொண்ட இந்த விளை​யாட்டு திருவிழா இன்​றுடன் நிறைவடைகிறது. இதில் இந்​தியா 21 தங்​கம், 27 வெள்ளி, 37 வெண்​கலம் என 85 பதக்​கங்​கள்

வென்று 4-வது இடத்​தில் உள்​ளது. நிறைவு நாளான இன்று இந்​தி​யா​வுக்கு எந்​த​வித போட்​டிகளும் இல்​லை. மாறாக 5-வது இடத்​தில் உள்ள உஸ்​பெகிஸ்​தான் (21 தங்​கம், 25 வெள்​ளி, 24 வெண்​கலம்) இன்று குதிரையேற்றத்தில் பங்​கேற்​கிறது. இதனால் பதக்க பட்​டியலில் சிறிய மாற்​றங்​கள்​ நிகழ வாய்ப்​பு உள்​ளது.

மல்யுத்தத்தில் அமன் ஷெராவத்துக்கு தங்கம்

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யின் மல்​யுத்​தத்​தில் ஆடவருக்​கான 57 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் அமன் ஷெராவத் 11-7 என்ற கணக்​கில் வடகொரி​யா​வின் நடப்பு உலக சாம்​பிய​னான சோங் சாங் ஹானை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றார். இது ஆசிய விளை​யாட்டு போட்​டி​யின் பேண்​டம்​வெ​யிட் பிரி​வில் இந்​தி​யா​வின் முதல் தங்​கப் பதக்​க​மாகும்.

மகளிருக்​கான 53 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் அன்​டிம் பங்​ஹால் 1-9 என்ற கணக்​கில் ஜப்​பானின் மியோ​கா​விடம் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். ஆடவருக்​கான 97 கிலோ எடைப் பிரி​வில் இந்​தி​யா​வின் தீபக் பூனியா 2-1 என்ற கணக்​கில் மங்​கோலி​யா​வின் கன்​கு​யாங்கை வீழ்த்தி வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​றி​னார்.

SCROLL FOR NEXT