விளையாட்டு

அக்டோபர் 24-ம் தேதி ஐஎம்எல் டி20 தொடர்

செய்திப்பிரிவு

மும்பை: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரின் (ஐஎம்எல்) 2-வது சீசன் போட்​டிகள் வரும் அக்​டோபர் 24 முதல் நவம்​பர் 14 வரை நடை​பெறும் என போட்டி அமைப்பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர். போட்டிகள் மும்பை, வதோதரா, விசாகப்பட்​டினத்தில் நடத்​தப்பட உள்​ளன. முதல் சீசனில் சச்​சின் டெண்​டுல்​கர், பிரையன் லாரா, ஷேன் வாட்​சன், யுவ​ராஜ் சிங், கிறிஸ் கெய்ல் மற்​றும் குமார் சங்​ககரா உள்​ளிட்டோர் பங்​கேற்​றிருந்​தனர்.

இந்​தி​யா, ஆஸ்​திரேலி​யா, தென் ஆப்​பிரிக்​கா, மேற்கிந்தியத் தீவு​கள், இங்​கிலாந்து மற்​றும் இலங்கை ஆகிய நாடு​களைப் பிர​தி​நி​தித்​து​வப்​படுத்​தும் 6 தொழில்முறை அணி​கள் மீண்​டும் கலந்து கொண்டு மோதஉள்​ளன. போட்டி அட்​ட​வணை, வீரர்​கள் பட்​டியல் மற்​றும் டிக்​கெட் முன்​ப​திவு உள்​ளிட்ட கூடு​தல் விவரங்​கள் வரும் மாதங்​களில் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும்​.

          
SCROLL FOR NEXT