மார்தா கோஸ்ட்யுக்

 
விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ்: இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

செய்திப்பிரிவு

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வரு​கிறது. இதன் 8-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரி​வில் நடை​பெற்ற 4-வது சுற்று ஆட்​டம் ஒன்​றில் 4 முறை சாம்​பியனும் 3-ம் நிலை வீராங்​க​னை​யு​மான போலந்​தின் இகா ஸ்வியாடெக், 15-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் மார்தா கோஸ்ட்யுக்​குடன் மோதி​னார்.

இதில் மார்தா கோஸ்ட்​யுக் 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்​கில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். இகா ஸ்வி​யாடெக்​கிற்கு நேற்று 25-வது பிறந்த நாளாகும். இதனால் அவரது தோல்வி ரசிகர்​களுக்கு ஏமாற்​ற​மாக அமைந்தது.

7-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் எலினா ஸ்விட்​டோலினா 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்​கில் 11-ம் நிலை வீராங்கனை​யான சுவிட்​சர்​லாந்​தின் பெலின்டா பென்சிக்கையும், 18-ம் நிலை வீராங்​க​னை​யான ருமேனி​யா​வின் சொர்னா கிறிஸ்​டியா 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்​கில் 148-ம் நிலை வீராங்​க​னை​யான சீனா​வின் சியு வாங்​கை​யும் வீழ்​த்தி கால் இறுதி சுற்றில் கால் பதித்தனர்.

SCROLL FOR NEXT