விளையாட்டு

“மனதளவில் திடமாக இருந்தால்...” - வெற்றி ரகசியம் சொல்லும் திலக் வர்மா

வேட்டையன்

தரம்சாலா: மனதளவில் திடமாக இருந்தால் எந்த இடத்திலும் பேட் செய்ய களம் கண்டு, சிறப்பாக விளையாட முடியும் என இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை இந்தியாவும் வென்றன. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென் அப்பிரிக்காவும் வென்றுள்ளன. மூன்றாவது போட்டி இன்று தரம்சாலாவில் நடைபெறுகிறது.

கடந்த போட்டியில் 214 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய அணி சார்பில் பேட்டிங் ஆர்டரில் மூன்றாம் இடத்தில் அக்சர் படேல் களம் கண்டு, 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். 5-ம் இடத்தில் விளையாடிய திலக் வர்மா 34 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.

இந்த சூழலில் செய்தியாளர் சந்திப்பில் திலக் வர்மா, “அணியில் உள்ள எல்லோரும் பேட்டிங் ஆர்டரில் எந்த இடத்திலும் விளையாட தயாராக உள்ளோம். அணி நிர்வாகத்தின் விருப்பத்துக்கு ஏற்ப மூன்று, நான்கு அல்லது ஐந்தாம் இடத்தில் விளையாட நான் தயாராக உள்ளேன். மனதளவில் திடமாக இருந்தால் எந்த இடத்திலும் பேட் செய்ய களம் கண்டு சிறப்பாக விளையாட முடியும்.

கடந்த 2024 உலகக் கோப்பை தொடரில் டாப் ஆர்டரில் அக்சர் படேல் தனது ரோலை சிறப்பாக செய்திருந்தார். சில நாட்களில் நமது திட்டங்கள் நடைபெறாமல் போகலாம்” என்றார்.

SCROLL FOR NEXT