விளையாட்டு

“சூர்யவன்ஷி ஒரு தலைமுறைக்கான வீரராக உருவாக முடியும்” - ஜிம்பாப்வே டி20 கேப்டன் சிகந்தர் ராசா

செய்திப்பிரிவு

ஹராரே: இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக ஜிம்​பாப்​வே​யில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான முதல் டி 0 போட்டி நாளை (23-ம் தேதி) ஹராரே​வில் நடை​பெறுகிறது. ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்​திய அணி அயர்​லாந்​து, இங்கிலாந்து அணி​களுக்கு எதி​ரான டி 20 தொடரை இழந்த நிலையில் தற்​போது ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ரான தொடரை விளை​யாட உள்​ளது.

ஜிம்​பாப்வே அணி கடந்த பிப்​ர​வரி மாதம் இலங்​கை​யில் நடைபெற்ற ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்​றில் பலம் வாய்ந்த ஆஸ்​திரேலிய அணியை 29 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது. இதைத் தொடர்ந்து இலங்​கை, வங்​கதேச அணி​களுக்கு எதி​ராக நடை​பெற்ற டி 20 தொடர்​களி​லும் ஜிம்பாப்வே அணி வெற்றி கண்​டிருந்​தது. இதனால் இந்​திய அணிக்கு எதி​ரான டி 20 தொடரை ஜிம்​பாப்வே அணி மிகுந்த நம்பிக்​கை​யுடன் எதிர்​கொள்​கிறது.

இந்​நிலை​யில் இந்​திய அணிக்கு எதி​ரான டி20 கிரிக்​கெட் தொடர் குறித்து ஜிம்​பாப்வே அணி​யின் கேப்​டன் சிகந்​தர் ராசா கூறியதாவது: இந்​தத் தொடரில் இரு நாடு​களுக்​கும் வெற்றி பெறச்சமமான வாய்ப்​பு​கள் இருக்​கும். சமீப​கால​மாக நாங்​கள் மிக​வும் சீரான மற்​றும் விறு​விறுப்​பான கிரிக்​கெட்டை விளை​யாடி வரு​கிறோம். இதனால் இந்​தி​யா​வுக்கு எதி​ரான டி20 தொடர் ரசிகர்களுக்கு விருந்​தாக அமை​யும் என்​பதை என்​னால் உறுதியாகக் கூற முடி​யும்.

வெற்றி தோல்​வியைப் பொறுத்​தவரை, இந்​தத் தொடரைக் கைப்​பற்ற இரு அணி​களுக்​குமே சமமான வாய்ப்​பு​கள் உள்​ளன. இந்திய அணி தற்​போது வீரர்​கள் மாற்​றத்​துக்​கான கட்​டத்​தில் உள்ளது. அதே​போல் ஜிம்​பாப்வே அணி​யிலும் மாற்​றங்​கள் நிகழ்ந்து வரு​கின்​றன. இதனால் நடை​பெற உள்ள டி 20 தொடர் ஒருதரப்​பாக இருக்​கும் என நான் கருத​வில்​லை.

இந்​திய அணி​யில் வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயதே ஆகிறது. சர்வ​தேச கிரிக்​கெட்​டில் விளை​யாடிய முதல் மூன்று போட்டிகளிலேயே அவர், மீது விமர்​சனங்​களை வைப்​பது நியாயமாக இருக்​காது. வைபவ் சூர்​ய​வன்​ஷியைச் சுற்றி நிறைய சீனியர் வீரர்​கள் உள்​ளனர். அவர், சரி​யாக வழிநடத்​தப்​பட்​டால், அவரால் கண்​டிப்​பாக ஒரு தலை​முறைக்​கான வீர​ராக உரு​வாக முடி​யும். இவ்​வாறு சிகந்​தர்​ ரா​சா கூறி​னார்​.

SCROLL FOR NEXT