

பிரிஸ்பன்: வங்கதேச கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி ஆகஸ்ட் 13 முதல் 17 வரை டார்வின் நகரிலும், 2-வது மற்றும் கடைசி டெஸ் போட்டி ஆகஸ்ட் 22 முதல் 26 வரை குயின்ஸ்லாந்தில் உள்ள மேக்கே நகரில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ‘பிக் 4’ என்று அழைக்கப்படும் அணியின் சீனியர் நட்சத்திரங்களான கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன் ஆகியோர் காயங்களில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்ளனர். இந்தத் தொடருடன் ஆஸ்திரேலிய அணி அடுத்த 12 மாதங்களில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து சுற்றுப்பயணங்கள் உட்பட 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
அணி விவரம்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்டு, ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், ஜோஷ் இங்லிஷ், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பியூ வெப்ஸ்டர், நேதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட்.