கோப்புப்படம்

 
விளையாட்டு

கால்பந்தில் ஐசிஎஃப் ஆட்டம் டிரா

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கால்பந்து சங்​கம் சார்​பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்​தர் பார​தி​தாசன் கால்​பந்து மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஐசிஎஃப் - தமிழக காவல்​துறை அணி​கள் மோதின. இந்த ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் டிரா​வில் முடிவடைந்தது.

தமிழக காவல்​துறை அணி சார்​பில் 17-வது நிமிடத்​தில் கணேஷ மூர்த்​தி​யும், ஐசிஎஃப் அணி தரப்​பில் 80-வது நிமிடத்​தில் நரேஷும் கோல் அடித்​தனர். தமிழக காவல்​துறை அணி​யைச் சேர்ந்த கமலப்​பிரியன் சிறந்த வீர​ராக தேர்​​வா​னார்​.

          
SCROLL FOR NEXT