விளையாட்டு

“எங்கள் அணி பந்​து​வீச்​சாளர்​களை குறை​கூற மாட்​டேன்” - மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா

செய்திப்பிரிவு

மும்பை: சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணிக்​கெ​தி​ரான போட்டியில் தோல்வி அடைந்​ததற்கு எங்​கள் அணி பந்து வீச்சாளர்களை குறை கூற​மாட்​டேன் என்று மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யின் கேப்​டன் ஹர்திக் பாண்டியா தெரி​வித்​தார்.

மும்பை வான்​கடே மைதானத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற போட்​டி​யில் ஹைத​ரா​பாத் அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் மும்​பையை வீழ்த்​தி​யது. முதலில் விளை​யாடிய மும்பை அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட் இழப்​புக்கு 243 ரன்​களை குவித்​தது. இந்​தப் போட்​டி​யில் மும்பை அணி நிச்​ச​யம் வெற்றி பெறும் என எதிர்​பார்க்​கப்​பட்ட நிலை​யில், சன்​ரைசர்ஸ் அணி அதிரடி​யாக விளையாடி வெற்​றியை வசப்​படுத்​தி​யது.

அந்த அணி 18.4 ஓவர்​களில் 4 விக்​கெட் இழப்​புக்கு 249 ரன்​களை குவித்து 6 விக்​கெட்​டு​கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்​றியை பெற்​றது. அபிஷேக் சர்​மா, டிரா​விஸ் ஹெட், ஹெய்ன்​ரிச் கிளாசென், சலில் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடி ஹைத​ரா​பாத் அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர். இது மும்பை அணிக்கு 6-வது தோல்​வி​யாக அமைந்​தது. இந்​நிலை​யில், மும்பை அணி​யின் தொடர் தோல்வி குறித்து மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யின் கேப்​டன் ஹர்​திக் பாண்​டியா கூறிய​தாவது: இந்​தப் போட்​டி​யில் நாங்​கள் சிறப்​பாகவே பேட்​டிங் செய்​தோம்.

ரியான் ரிக்​கெல்​டன் அபார​மான இன்​னிங்ஸை விளை​யாடி சதமடித்​தார். ஸ்கோர் போர்​டில் 243 ரன்​கள் என்று இருந்​த​போது மிகுந்த நம்​பிக்​கை​யுடன் இருந்​தோம். ஆனால், நாங்​கள் தோல்வி அடைந்​து​விட்​டோம். இந்​தத் தோல்விக்கு பனிப்​பொழிவு ஒரு பெரிய பங்கு வகித்​த​தாக நான் நினைக்​க​வில்​லை. ஹைத​ரா​பாத் வீரர்​கள் சில நல்ல ஷாட்​களை விளை​யாடினர்.

நாங்​கள் மோச​மாக பந்து வீசினோம். 244 என்ற இலக்கை எதிரணி​யினர் எட்ட விட முடி​யாமல் எங்​கள் பந்​து​வீச்​சாளர்​கள் தடுப்​பார்​கள் என்று நம்​பினேன். ஆனால் எங்​களது பந்​து​வீச்​சுத் திட்​டத்தை சரி​யான முறை​யில் செயல்​படுத்த முடிய​வில்​லை.அவர்​கள் மிகச்​சிறந்த இன்​னிங்ஸை விளை​யாடினர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அப்​படிப்​பட்ட ஒரு சீச​னாகத்​தான் இருக்​கிறது.

உங்​களுக்கு வாய்ப்​பு​கள் கிடைக்​கும்​போது, அவற்றை சரி​யாக பயன்​படுத்திக் கொள்ள வேண்​டும். நீங்​கள் அப்​படிச் செய்​யா​விட்​டால், அது நிச்​ச​யம் உங்​களை பாதிக்​கும். இந்த சீசனில், எங்​களுக்கு அதிக வாய்ப்​பு​கள் இல்​லை. நான் எனது பந்​து​வீச்​சாளர்​களைக் குறை கூற மாட்​டேன். ஒட்​டுமொத்​த​மாக, மும்பை இந்​தி​யன்ஸ் அணி வழக்​க​மாக செய்​வதை இன்று எங்​களால் செய்ய முடிய​வில்​லை. இவ்​வாறு ஹர்​திக் பாண்​டியா தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT