விளையாட்டு

பீல்​டிங்​கில் மிரட்​டியது எப்படி? - மனம் திறக்​கும் அக்சர் படேல்

செய்திப்பிரிவு

அகம​தா​பாத்: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்​தினம் மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெற்ற அரை இறுதி ஆட்​டத்​தில் இங்​கிலாந்து அணியை 7 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி 4-வது முறை​யாக இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது இந்​திய அணி. 254 ரன்​கள் என்ற இலக்கை துரத்​திய இங்​கிலாந்து அணி கடும் அச்​சுறுத்​தல் கொடுத்​தது.

இந்த ஆட்​டத்​தில் அக்​சர் படேல் 2 அபார​மான கேட்ச்​களை எடுத்து அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தார். இங்​கிலாந்து கேப்​டன் ஹாரி புரூக் அடித்த பந்தை கவர் திசை​யில் நின்ற அக்​சர் படேல் பின்​புற​மாக 24 மீட்​டர் தூரம் விரை​வாக ஓடிச் சென்று பாய்ந்​த​படி அற்​புத​மாக கேட்ச் செய்​தார்

          

இதே​போன்று 14-வது ஓவரில் வில் ஜேக்ஸ் அடித்த பந்தை எல்​லைக்​கோட்​டுக்கு அருகே அக்​சர் படேல் எல்​லைக்​கோட்​டுக்கு அருகே பந்தை பாய்ந்து பிடித்​தார். ஆனால் நிலை தடு​மாறிய அவர், பந்தை உள்ளே தூக்கி வீசி​யபடி எல்​லைக்​கோட்​டுக்கு வெளியே விழுந்​தார். அப்​போது ஷிவம் துபே அதை கேட்ச் செய்ய வில் ஜேக்ஸ் ஆட்​ட​மிழந்​தார்.

போட்டி முடிவடைந்த பின்​னர் இந்த 2 கேட்ச்​கள் தொடர்​பாக அக்​சர் படேல் கூறும்​போது, “ஹாரி புரூக் கேட்ச் சிறப்​பானது. அது கடின​மாக இருந்​தது. ஆனால் ஆட்​டத்​தின் சூழ்​நிலையை கருத்​தில் கொண்​டால் அப்​போது பார்ட்​னர்​ஷிப்பை உடைப்​ப​தற்கு மிக​வும் முக்​கிய​மான​தாக வில் ஜேக்ஸ் கேட்ச் அமைந்​தது.

பீல்​டிங் அடிப்​படை​யில் என்​னைக் கேட்​டால், ஹாரி புரூக்​கின் கேட்ச் கடின​மாக இருந்​தது. அதிர்​ஷ்ட​வச​மாக பந்து என்​னைத் துரத்​துகிறது என்று நினைத்​தேன். எந்த நேரத்​தி​லும், போட்டி எங்​களது பிடி​யில் இருந்து வில​கிச் செல்​லும் என்று நாங்​கள் நினைக்​க​வில்​லை.

ஏனெனில் அர்​ஷ்தீப்​புக்​கும், பும்​ரா​வுக்​கும் 2 ஓவர்​கள் மீதம் இருந்​தன. அவர்​கள் தொடர் முழு​வதும் சிறப்​பாக பந்து வீசி இருந்​தனர். இதனால் இங்​கிலாந்து அணியை கட்​டுப்​படுத்த முடி​யும் என்று நாங்​கள் நினைத்​தோம்​, அது​தான் நடந்தது" என்றார்.

இறு​திப் போட்​டி நடு​வர்​கள் அறி​விப்பு:

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்​தியா - நியூஸிலாந்து அணிகள்​ நாளை அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் பலப்​பரீட்சை நடத்​துகிறது.இந்​நிலை​யில் இந்த ஆட்​டத்​துக்​கான நடு​வர்​களை ஐசிசி அறி​வித்​துள்​ளது. இங்​கிலாந்தை சேர்ந்த ரிச்​சர்ட் இல்​லிங்​வொர்த், அலெக்ஸ் வார்ஃப் ஆகியோர் களநடு​வர்களாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT