விளையாட்டு

ஹாக்கி இந்தியா லீக் போட்டி: எச்ஐஎல் ஜிசி அபார வெற்றி

செய்திப்பிரிவு

சென்னை: ஹாக்கி இந்திய லீக் போட்டியில் எச்ஐஎல் ஜிசி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

சென்னை எழும்பூரிலுள்ள மேயர் ராதா கிருஷ்ணன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எச்ஐஎல் ஜிசி, ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் அணிகள் மோதின. இதில் எச்ஐஎல் ஜிசி அணி 6-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் அணிதான் முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. ஆனால் அதன் பின்னர் சுதாரித்து விளையாடிய எச்ஐஎல் ஜிசி அணியினர் தொடர்ந்து 3 கோல்களை அடித்தனர்.

அதன் பிறகு ஷிராச்சி பெங்கால் அணியினர் 2 கோல்களை அடித்தனர். இருந்தபோதும் எச்ஐஎல் ஜிசி அணியின் மொத்தம் 6 கோல்களை அடித்து வெற்றியைச் சுவைத்தனர்.

எச்ஐஎல் ஜிசி அணி சார்பில் கேன் ரஸ்ஸல் அபாரமாக செயல்பட்டு 3 கோல்களை அடித்தார். அணியைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆல்பெர்ரி, சுதீப் சிர்மாக்கோ, சாம் வார்ட் ஆகியோர் தலா ஒரு கோலை அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் அணி சார்பில் கிறிஸ்டோபர் ரூர், ஜுக்ராஜ் சிங், டாம் கிராம்புஷ் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.

SCROLL FOR NEXT