விளையாட்டு

ஹர்​ஷித் ராணா, வருண் காயம்: இந்​திய அணியில் பிரின்ஸ், பிஷ்னோய்

செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர்​கள் ஹர்​ஷித் ராணா, வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் காயமடைந்​துள்​ள​தால் அவர்களுக்குப் பதிலாக அணி​யில் பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்​திய கிரிக்​கெட் அணி தற்​போது இங்​கிலாந்​தில் டி20, ஒரு​நாள் தொடரில் விளை​யாடி வரு​கிறது. இதில் இந்​திய அணி​யில் இடம்​பெற்​றிருந்த ஹர்​ஷித் ராணா காயம் அடைந்​துள்​ளார். அவருக்​குப் பதிலாக தற்​போது பிரின்ஸ் யாதவ் சேர்க்​கப்​பட்​டுள்​ளார் என்று இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் ​(பிசிசிஐ) நேற்று தெரி​வித்​துள்​ளது.

இங்​கிலாந்​துக்கு எதி​ரான ஒரு​நாள் தொடரில் பிரின்ஸ் யாதவ் விளை​யாடு​வார். அதே​போல் காயமடைந்​துள்ள வருண் சக்​ர​வர்த்​திக்​குப் பதிலாக சுழற்​பந்து வீச்​சாளர் ரவி பிஷ்னோய் அணி​யில் இணை​வார். அவர் ஜிம்​பாப்வே அணிக்​கெ​தி​ரான சர்​வ​தேச டி20 தொடரில் வருணுக்​குப் பதிலாக விளை​யாடு​வார்.

SCROLL FOR NEXT