இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்

 
விளையாட்டு

“எங்கள் வீரர்களை எண்ணி பெருமை கொள்கிறேன்” - இங்கிலாந்து கேப்டன் ப்ரூக் | T20 WC 2026

வேட்டையன்

மும்பை: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 7 ரன்களில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் சதம் விளாசி இருந்தார்.

254 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி இந்த ஆட்டத்தில் விரட்டியது. தாங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு ஓவரிலும் பந்தை எல்லை கோட்டுக்கு வெளியே விளாசுவதில் மும்முரமாக இருந்தனர். இதில் வில் ஜேக்ஸ் மற்றும் சாம் கரன் உடன் 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் பெத்தேல். 20 ஆட்டத்துக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் கூறியதாவது:

          

“முதல் இன்னிங்ஸில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உதவும் என கணித்தோம். ஆனால், கள சூழல் அப்படி அமையவில்லை. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். இந்த தொடரிலும், இந்த ஆட்டத்திலும் நாங்கள் விளையாடிய விதத்தை எண்ணி பெருமை கொள்கிறோம்.

இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சனின் கேட்ச்சை விட்டு தவறு செய்துவிட்டேன். ‘Catches win Matches’ என சொல்வதுண்டு. இன்று எங்களது நாளாக அமையவில்லை. இந்த ஆட்டத்தில் எங்கள் அணியின் ஜேக்கப் பெத்தேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் கிரிக்கெட் உலகின் பார்வையை அவர் ஈர்த்துள்ளார்.

250+ ரன்கள் இலக்கை விரட்டும் போது வேறொரு அணியாக இருந்திருந்தால் நிச்சயம் சுருண்டிருக்கும். ஆனால், ஆட்டம் முழுவதும் எங்களது இருப்பை வெளிப்படுத்தினோம். இலக்கை எட்டுவதில் மும்முரமாக இருந்தோம். ஆட்டத்தின் முடிவு வேறு விதமாக அமைந்த காரணத்தால் இறுதியில் அது முடியாமல் போனது” என்றார்.

SCROLL FOR NEXT