குர்னூர் பிரார்

 
விளையாட்டு

இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவை நீக்கிவிட்டு குர்னூர் பிரார் சேர்ப்பு

செய்திப்பிரிவு

வெலிங்டன்: இந்​திய கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடை​யி​லான டி 20 தொடரை இந்​திய அணி 3-2 என கைப்​பற்​றியது. இதைத் தொடர்ந்து தற்​போது ஒருநாள் போட்​டித் தொடரில் இரு அணிகளும் விளை​யாடி வரு​கின்​றன. இந்​தத் தொடர் இன்​றுடன் முடிவடைகிறது.

இதையடுத்து 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் இரு அணிகள் விளை​யாட உள்​ளன. ஐசிசி டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் சுழற்​சி​யின் அங்​க​மாக அமைந்​துள்ள இந்​தத் தொடரின் முதல் போட்டி வரும் 19-ம் தேதி வெலிங்​டனில் தொடங்​கு​கிறது. இந்த தொடருக்​கான இந்​திய அணி ஏற்​கெனவே அறி​விக்​கப்​பட்டு இருந்​தது.

இதில் குல்​தீப் யாதவ் சேர்க்​கப்​பட்டு இருந்​தார். இந்​நிலை​யில் நியூஸிலாந்து ஆடுகளங்​கள் வேகப்பந்து வீச்​சுக்கு சாதக​மானவை என்​ப​தால் குல்​தீப் யாதவ் நீக்​கப்​பட்டு வேகப்​பந்து வீச்​சாளரான குர்​னூர் பிரார் அணி​யில் சேர்க்​கப்​பட்டு உள்​ளார்.

டெஸ்ட் அணி​யில் இடம்​பி​டித்​துள்​ள​தால் இன்று நடை​பெறும் 5-வது மற்​றும் கடைசி ஒருநாள் போட்​டி​யில் குர்​னூர் பிரார் விளை​யாட​மாட்​டார் என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT