இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ர் பிரக்​ஞானந்​தா

 
விளையாட்டு

கி​ராண்ட் செஸ் டூர் போட்​டி​: பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி

செய்திப்பிரிவு

செயின்ட் லூயிஸ்: கி​ராண்ட் செஸ் டூர் போட்​டி​யின் அரை இறுதி சுற்று அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் கிளப்​பில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்​தா, ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமருக்கு எதி​ரான முதல் ஆட்​டத்தை டிரா செய்​திருந்​தார். இந்​நிலை​யில் வின்​சென்ட் கீமருடன் நேற்று முன்​தினம் மீண்​டும் மோதி​னார் பிரக்​ஞானந்​தா. இதில் 55-வது நகர்த்​தலின் போது பிரக்​ஞானந்தா வெற்றி பெற்​றார்.

இதன் மூலம் பிரக்​ஞானந்தா 9-3 என்ற புள்​ளி​கள் கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளார். இதன் வாயி​லாக கிராண்ட் செஸ் டூரின் நிறைவு போட்​டி​யின் இறுதி சுற்​றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை நெருங்கி உள்​ளார் பிரக்​ஞானந்​தா.

கிளாசிக்​கல் போட்​டியை தொடர்ந்து பிரக்​ஞானந்​தா​வும், வின்​சென்ட் கீமரும் 2 ரேபிட் மற்​றும் 4 பிளிட்​ஸ் போட்​டி​யிலும்​ மோத உள்​ளனர்​.

SCROLL FOR NEXT