விளையாட்டு

யு23 உலக சாம்​பியன்​ஷிப் மல்யுத்தம் முதல் ரஞ்சி கோப்பை வரை | ஸ்போர்ட்ஸ் ரவுண்ட்-அப்

செய்திப்பிரிவு

யு-23 உலக மல்​யுத்த சாம்​பியன்​ஷிப் அமெரிக்​கா​வின் லாஸ் வேகாஸ் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான 72 கிலோ எடைப் பிரிவு அரை இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் அம்​ருதா பூஜாரி, சீனா​வின் வென் ஜின் கியூ உடன் மோதி​னார். இதில் அம்​ருதா பூஜாரி 10-8 என்ற கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார்.

தங்​கப் பதக்​கத்​துக்​கான மோதலில் அம்​ரு​தா, உக்​ரைனின் இரினா சப்​லோட்​ஸ்கா​வுடன் மோதுகிறார். மகளிருக்​கான 59 கிலோ எடைப் பிரி​வில் வெண்​கலப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் கோமல் 7-2 என்ற கணக்​கில் கஜகஸ்​தானின் விக்​டோரியா குசைனோ​வாவை வீழ்த்​தி​னார்​.

சர்வதேச போட்டிகளை நடத்த ரூ.50 கோடி வரை நிதியுதவி

இந்​தி​யா​வில் சர்​வ​தேச விளை​யாட்​டுப் போட்​டிகளை நடத்த தேசிய விளை​யாட்டு கூட்​டமைப்​பு​களுக்கு ரூ.50 கோடி வரை நிதி​யுதவி வழங்​கப்​படும் என்று மத்​திய விளை​யாட்டு அமைச்​சகம் அறி​வித்​துள்​ளது. இதற்​கான திருத்​தி​யமைக்​கப்​பட்ட வழி​காட்​டு​தல்​கள் நேற்று வெளி​யிடப்​பட்​டன.

இதன்​படி, ஒலிம்​பிக் மற்​றும் உலக சாம்​பியன்​ஷிப் போட்​டிகளில் இந்​தியா பதக்​கம் வென்ற அல்​லது முதல் 10 இடங்​களுக்​குள் வந்த விளை​யாட்​டுப் பிரிவு​களுக்கு அதி​கபட்​ச​மாக ரூ.50 கோடி வழங்​கப்​படும். பிற தகு​தி​யான விளை​யாட்​டுப் பிரிவு​களுக்கு ரூ.20 கோடி வரை​யும், இந்​தி​யா​வில் நடை​பெறும் ஆசிய சாம்​பியன்​ஷிப் போட்​டிகளுக்கு ரூ.3 கோடி வரை​யும் நிதி​யுதவி அளிக்​கப்​படும். தேசிய விளை​யாட்​டுப் போட்​டிகளை நடத்​த​வும் ரூ.50 கோடி வரை வழங்​கப்​படும்.

காமன்வெல்த் விளையாட்டு: குஜராத்துக்கு ரூ.2,000 கோடி நிதி

2030-ம் ஆண்டு அகம​தா​பாத்​தில் நடை​பெறவுள்ள காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டிகளை நடத்​து​வதற்​காக, குஜ​ராத் அரசுக்கு ரூ.2,000 கோடி நிதி​யுதவி வழங்க மத்​திய விளை​யாட்டு அமைச்​சகம் உறு​தி​யளித்​துள்​ளது. இதற்​கான நிதி, தேசிய விளை​யாட்டு கூட்​டமைப்​பு​களுக்​கான உதவித் திட்​டத்​தின் கீழ் வழங்​கப்​படும். 2025-ம் ஆண்​டின் விலைவி​கித அடிப்​படை​யில் ஒதுக்​கப்​படும் இந்த நிதி, பணவீக்​கத்​தைக் கணக்​கில் கொண்டு 2030-ல் சுமார் ரூ.2,500 கோடி​யாக உயரும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

புரோ ஹாக்கி லீக் தொடரில் இந்தியா - ஜெர்மனி மோதல்

2026-27-ம் ஆண்டுக்கான எஃப்ஐஎச் புரோ லீக் ஹாக்கி தொடரில், இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் ஆட்டங்கள் 2027-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி 28-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்திய ஆடவர் அணியானது ஜெர்மனி (13, 16-ம் தேதி), அர்ஜெண்டினா (15, 18-ம் தேதி), இங்கிலாந்து (23, 26-ம் தேதி), ஸ்பெயின் (25, 28-ம் தேதி) ஆகிய அணிகளுடன் மோதுகிறது.

இந்திய மகளிர் அணி ஆட்டங்கள் பிப்ரவரி 23 முதல் 28 வரை நடைபெறுகின்றன. இந்திய மகளிர் அணியானது இங்கிலாந்து (23, 26-ம் தேதி), ஸ்பெயின் (25, 28-ம் தேதி) அணிகளுடன் மோதுகிறது.

டென்னிஸில் ஹரிணி, குஷி ஜோடி சாம்பியன்

ஃபெனஸ்டா ஓபன் தேசிய டென்​னிஸ் போட்டி டெல்​லி​யில் நடை​பெற்​றது. இதில் யு-16 மகளிர் இரட்​டையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் தமிழ்​நாட்​டின் சன்​மிதா ஹரிணி, குஷி கதி​யான் ஜோடி 6-3, 6-3 என்ற செட் கணக்​கில் போட்​டித் தரவரிசை​யில் 4-வது இடத்​தில் உள்ள பூர்வி பட்​வா, ரஞ்​சனா சங்க்​ராம் ஜோடியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது. இதில் குஷி கதி​யான் நேற்று மட்​டும் 3 போட்​டிகளில் விளை​யாடி​னார். இரட்​டையர் பிரி​வில் பட்​டம் வென்ற அவர், யு-16 ஒற்​றையர் மற்​றும் யு-14 அரை இறுதி ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்று அசத்​தி​னார்​.

பெங்களூரு - சென்னை இன்று மோதல்

ஐஎஸ்​எல் கால்​பந்து தொடரில் இன்று 7.30 மணிக்கு பெங்​களூரு​வில் உள்ள கண்​டீரவா மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பெங்​களூரு எஃப்சி - சென்​னை​யின் எஃப்சி அணி​கள் மோதுகின்​றன.

சென்னை அணி தனது முதல் ஆட்​டத்தை கோவா எஃப்சி அணிக்கு எதி​ராக 1-1 என்ற கோல் கணக்​கில் டிரா செய்​திருந்​தது. அதேவேளை​யில் பெங்​களூரு அணி தனது முதல் ஆட்​டத்​தில் 3-2 என்ற கோல் கணக்​கில் ஸ்போர்​டிங் கிளப் டெல்லி அணியை தோற்​கடித்து இருந்​தது.

சென்​னை​யின் எஃப்​.சி. தலை​மைப் பயிற்​சி​யாளர் கிளிஃ​போர்ட் மிராண்டா கூறும்​போது, “பெங்​களூரு அணிக்கு அதிக இடம் கிடைக்​காத வகை​யில் நாங்​கள் தற்​காப்பு ஆட்​டத்தை வெளிப்​படுத்த வேண்​டும். எதிரணிக்கு இடமும், நேர​மும் கொடுக்​காமல் விளை​யாட வேண்​டும்​” என்​றார்​.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் உத்தராகண்ட் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (18-ம் தேதி) முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து தமிழக அணி ரயில்வே அணிக்கு எதிராகவும் விளையாடுகிறது. இந்த ஆட்டம் வரும் 26 முதல் 29 வரை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.இந்த 2 ஆட்டங்களுக்கான தமிழக அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மாநில சீனியர் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது.

அணி விவரம்:சாய் கிஷோர் (கேப்டன்), ஆந்த்ரே சித்தார்த், நாராயணன் ஜெகதீசன், விமல் குமார், பிரதோஷ் ரஞ்ஜன் பால், பாபா இந்திரஜித், சோனு யாதவ், அஜித் ராம், ஹெம்சுதேஷன், குர்ஜப்னீத் சிங், சரவண குமார், ஆதிஷ், அஜிதேஷ், நிதிஷ் ராஜகோபால், தீபேஷ்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT