விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் முதல் குத்துச்சண்டை வரை: ஸ்போர்ட்ஸ் ரவுண்ட்-அப்

செய்திப்பிரிவு

ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனையொட்டி கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஜிம்​பாப்வே அணியை சேர்ந்த வேகப்​பந்து வீச்​சாள​ரான பிளெசிங் முசர​பானியை ஒப்​பந்​தம் செய்​துள்​ளது.

ஐபிஎல் வாய்ப்​பைப் பயன்​படுத்​திக் கொள்​ளும் வகை​யில், முசர​பானி பாகிஸ்​தான் சூப்​பர் லீக் (பிஎஸ்​எல்) ஒப்​பந்​தத்​தைக் கைவிட்​டிருந்​தார். கடந்த மாதம் நடந்த பிஎஸ்​எல் ஏலத்​தில் முசர​பானியை எந்த அணி​யும் ஏலம் எடுக்​க​வில்​லை. இருப்​பினும் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யின் வீரர் ஷமர் ஜோசப்​புக்கு பதிலாக இஸ்​லா​மா​பாத் யுனைடெட் அணி​யால் முசர​பானி நேரடி​யாக ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டார். இப்​போது அந்த வாய்ப்​பைத் தவிர்த்​து​விட்டு கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யில் இணைந்​துள்​ளார் முசர​பானி. இந்​நிலை​யில் இஸ்​லா​மா​பாத் யுனைடெட் அணி​யுட​னான தனது ஒப்​பந்​தத்தை மீறி​யுள்ள முசர​பானி மீது சட்​டப்​பூர்வ நடவடிக்கை எடுக்க பாகிஸ்​தான் கிரிக்​கெட் ​வாரி​யம்​ த​யா​ராகி வரு​வ​தாக தகவல்​கள்​ வெளி​யாகி உள்​ளன.

          

நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா மோதல்: 5 டி20 ஆட்​டங்​கள் கொண்ட டி20 கிரிக்​கெட் தொடரில் விளை​யாடு​வதற்​காக தென் ஆப்​பிரிக்க அணி, நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்​தத் தொடரின் முதல் ஆட்​டம் இன்று (15-ம் தேதி) மவுன்ட்​மவுங்​கனி நகரில் நடை​பெறுகிறது. இந்​திய நேரப்​படி காலை 11.45 மணிக்கு நடை​பெறும் போட்​டியை சோனி சானல் நேரடி ஒளிபரப்பு செய்​கிறது.

சமீபத்​தில் முடிவடைந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்​டத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை நியூஸிலாந்து தோற்​கடித்து இருந்​தது. லீக் சுற்​று, சூப்​பர் 8 சுற்று ஆகிய​வற்​றில் அபார​மாக விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணியை அரை இறு​தி​யில் நியூஸிலாந்து அணி எளி​தாக பந்​தாடியது. இந்த தோல்விக்கு தற்​போதைய இருதரப்பு தொடரில் தென் ஆப்​பிரிக்க அணி பதிலடி கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். இரு அணி​களி​லும் முன்​னணி வீரர்​கள் பலருக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. தென் ஆப்​பிரிக்க அணி கேசவ் மகா​ராஜ் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது.

அரை இறுதியில் யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி: இந்தியன் வெல்ஸ் அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, சுவீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடியானது பிரான்ஸின் ஆர்தர் ரிண்டர்க்னெக், மொனாக்கோவின் வாலண்டைன் வச்செரோட் ஜோடியுடன் மோதியது. இதில் யுகி பாம்ப்ரி, கோரன்சன் ஜோடி 5-7, 7-6(7), 5-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

​கால் இறு​தி​யில் தருண் தோல்வி: சுவிட்​சர்​லாந்​தின் பாசல் நகரில் சுவிஸ் ஓபன் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் 43-ம் நிலை வீர​ரான இந்​தி​யா​வின் தருண் மனேப்​பள்​ளி, 51-ம் நிலை வீர​ரான இந்​தோ​னேஷி​யா​வின் அந்​தோணி சினிசுகா ஜின்​டிங்​குடன் மோதி​னார். ஒரு மணி நேரம் 6 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் தருண் மனேப்​பள்ளி 19-21, 21-19, 13-21 என்ற செட் கணக்​கில் தோல்வி அடைந்​தார்​.

கால்பந்தில் சுங்கவரித்துறை வெற்றி: சென்னை கால்​பந்து சங்கம் சார்​பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்​தர் பார​தி​தாசன் கால்​பந்து மைதானத்​தில் நடைபெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆட்டத்தில் சென்னை சுங்கவரித்துறை அணி - தமிழ்நாடு காவல் துறை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை சுங்கவரித்துறை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் 68-வது நிமிடத்தில் நந்தா கோல் அடித்தார். சிறந்த வீரராக சுங்கவரித்துறை அணியைச் சேர்ந்த சாய்ராம் தேர்வானார்.

குத்துச்சண்டை போட்டி இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்: ஃபியூச்​சர்ஸ் கோப்பை தொடர் தாய்​லாந்​தின் பாங்​காக் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று மகளிருக்​கான 51 கிலோ எடைப் பிரிவு அரை இறு​தி​யில் இந்​தி​யா​வின் சந்​திரி​கா, மொராக்​கோ​வின் ரிஹாப் ஹம்​தூனை வீழ்த்தி இறுதி சுற்​றில் நுழைந்​தார். 48 கிலோ எடைப் பிரிவு அரை இறு​தி​யில் இந்​தி​யா​வின் கன்​ஜன் 5-0 என்ற கணக்​கில் வட கொரி​யா​வின் யூ கியோங்கை தோற்​கடித்து இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

54 கிலோ எடைப் பிரி​வில் இந்​தி​யா​வின் ஜாய் தேவி, மெக்​சிகோ​வின் சோபியா ரமிரேஸை வீழ்த்தி இறுதி சுற்​றில் நுழைந்​தார். ஆடவருக்கான 50 கிலோ எடைப் பிரிவு அரை இறு​தி​யில் இந்​தி​யா​வின் அம்​பேகர் மீட்டி 5-0 என்ற கணக்​கில் உஸ்​பெகிஸ்​தானின் அப்​து​கானி யார்​கின்​ஜோனோவை வீழ்​தி​னார். அதேவேளை​யில் 57 கிலோ எடைப் பிரி​வில் இந்​தி​யா​வின் ராதாமணி லாங்​ஜம் 2-3 என்ற கணக்​கில் உக்​ரைனின் யெவன்​ஹெலினா பெட்​ருக்​கிடம் தோல்வி அடைந்து வெண்​கலப் பதக்​கம் பெற்​றார்​.

SCROLL FOR NEXT