விளையாட்டு

உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி

செய்திப்பிரிவு

ஆம்ஸ்டல்வீன்: உல​கக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்​லாந்து மற்​றும் பெல்​ஜி​யத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் பிரி​வில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்​டத்​தில் இங்​கிலாந்​துடன் மோதி​யது.

நெதர்​லாந்​தின் ஆம்​ஸ்​டல்​வீன் நகரில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி 2-4 என்ற கோல் கணக்​கில் தோல்வி அடைந்​தது.

ஆட்​டத்​தின் 13-வது நிமிடத்​தில் இங்​கிலாந்து அணி​யின் நிக்​கோலஸ் பான்​டு​ராக் கோல் அடித்​தார். இதனால் இங்​கி​கிலாந்து அணி 1-0 என முன்​னிலை பெற்​றது. ஆனால் இதில் இருந்து இந்​திய அணி மீண்டு வந்து 2-1 என முன்​னிலை பெற்று பதிலடி கொடுத்​தது. 16-வது நிமிடத்​தில் கேப்​டன் ஹர்​மன்​பிரீத் சிங்​கும், 24-வது நிமிடத்​தில் தில்​பிரீத் சிங்​கும் கோல் அடித்​தனர்.

ஆனால் 2-வது பாதி​யில் இங்​கிலாந்து அணி ஆதிக்​கம் செலுத்​தி​யது. 38-வது நிமிடத்​தில் ஸ்டூவர்ட் ரஷ்மியரும், 42-வது நிமிடத்​தில் ஹென்றி கிராஃப்​டும் கோல் அடிக்க இங்​கிலாந்து அணி 3-2 என முன்​னிலை பெற்​றது. ஆட்​டம் முடிவடைய 6 நிமிடங்​கள் எஞ்​சி​யிருந்த நிலை​யில் நிக்​கோலஸ் பான்​டு​ராக் மீண்​டும் கோல் அடிக்க இந்​திய அணி அதிர்ச்சி அடைந்​தது.

இதன் பின்​னர் கடைசி வரை போராடிய போதி​லும் இந்​திய அணி​யால் மேற்​கொண்டு கோல் அடிக்க முடி​யாமல் போனது. 2 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள இந்​திய அணி ஒரு வெற்​றி, ஒரு தோல்​வியை பதிவு செய்​துள்​ளது. இந்​திய அணி தனது கடைசி ஆட்​டத்​தில் பாகிஸ்​தானுடன் நாளை (19-ம் தேதி) மோதுகிறது.

இந்த ஆட்​டத்தை இந்​திய அணி குறைந்​த​பட்​சம் டிரா செய்​தால் மட்​டுமே அடுத்த சுற்​றுக்கு முன்​னேற முடி​யும். ஒருவேளை தோல்​வியை சந்​தித்​தால் தொடரில் இருந்து வெளி​யேற வேண்​டிய நிலை ஏற்​படும்​.

SCROLL FOR NEXT