விளையாட்டு

குரூப் ‘ஜே’ - அர்ஜெண்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான் அணிகள் எப்படி? | FIFA WC 2026

உலகக் கோப்பை கால்பந்து அணிகள் - ஒரு பார்வை

பெ.மாரிமுத்து

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘ஜே’ அர்ஜெண்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான் ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினா

பயிற்சியாளர்: லயோனல் ஸ்கலோனி

பிஃபா தரவரிசை: 1

சிறப்பான செயல் திறன்: 1978, 1986, 2022-ம் ஆண்டு தொடர்களில் சாம்பியன்.

கடைசி உலகக் கோப்பை: 2022, கத்தாரில் சாம்பியன்.

பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 18

தகுதி பெற்ற விதம்: தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின் கடினமான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அர்ஜெண்டினா அணி முழு ஆதிக்கம் செலுத்தியது. மொத்தம் விளையாடிய போட்டிகளில் 38 புள்ளிகள் (12 வெற்றிகள், 2 சமன்கள், 4 தோல்விகள்) பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது.

நட்சத்திரங்கள்: லயோனல் மெஸ்ஸி, திபு மார்டினெஸ், என்சோ பெர்னாண்டஸ்

ஒட்​டுமொத்த செயல் திறன்: 88 ஆட்​டங்​கள், 47 வெற்றி, 17 டிரா, 24 தோல்​வி, 152 அடித்த கோல்​கள், 101 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 16 vs அல்ஜீரியா

ஜூன் 22 vs ஆஸ்திரியா

ஜூன் 27 vs ஜோர்டான்

அல்ஜீரியா

பயிற்சியாளர்: விளாடிமிர் பெட்கோவிச்

பிஃபா தரவரிசை: 46

சிறப்பான செயல் திறன்: 2014-ம் ஆண்டு உலகக் கோப்பையில் கால் இறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேற்றம்.

கடைசி உலகக் கோப்பை: 2014

பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 4

தகுதி பெற்ற விதம்: 2018, 2022-ம்ஆண்டு உலகக் கோப்பைத் தொடர்களைத் தவறவிட்ட அல்ஜீரியா, இம்முறை தகுதிச்சுற்றின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மொத்தம் விளையாடிய 10 தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 25 புள்ளிகள் பெற்று தகுதி பெற்றது.

நட்சத்திரங்கள்: ரியாத் மஹ்ரெஸ், ராயன் ஐட்-நூரி, ராமி பென்செபைனி.

ஒட்​டுமொத்த செயல் திறன்: 13 ஆட்​டங்​கள், 3 வெற்றி, 3 டிரா, 7 தோல்​வி, 13 அடித்த கோல்​கள், 19 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 16 vs. அர்ஜெண்டினா

ஜூன் 22 vs. ஜோர்டான்

ஜூன் 27 vs ஆஸ்திரியா

ஆஸ்திரியா

பயிற்சியாளர்: ரால்ஃப் ரங்னிக்

பிஃபா தரவரிசை: 24

சிறப்பான செயல் திறன்: 1954-ம் ஆண்டு தொடரில் 3-வது இடம்

கடைசி உலகக் கோப்பை: 1998

பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 7

தகுதி பெற்ற விதம்: 28 வருடங்களுக்கு ஆஸ்திரியா தற்போதுதான் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தகுதி சுற்றில் ஹெச் பிரிவில் ஆஸ்திரியா முதலிடம் பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. அந்த அணி 23 கோல்களை அடித்து, வெறும் 5 கோல்களை மட்டுமே விட்டுக் கொடுத்தது.

நட்சத்திரங்கள்: டேவிட் அலபா, மார்செல் சபிட்சர், மார்கோ அர்னாடோவிக்

ஒட்​டுமொத்த செயல் திறன்: 29 ஆட்​டங்​கள், 12 வெற்றி, 4 டிரா, 13 தோல்​வி, 43 அடித்த கோல்​கள், 47 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 17 vs ஜோர்டான்

ஜூன் 22 vs அர்ஜெண்டினா

ஜூன் 27 vs அல்ஜீரியா

ஜோர்டான்

பயிற்சியாளர்: ஜமால் செல்லமி

பிஃபா தரவரிசை: 63

பங்கேற்ற உலகக் கோப்பைகள்: முதன்முறையாக பங்கேற்பு

தகுதி பெற்ற விதம்: ஜோர்டான் அணி, ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தகுதிச் சுற்றின் மூன்றாவது கட்டத்தில் 'பி' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம், தங்களது வரலாற்றிலேயே முதல்முறையாக உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.

2025-ம் ஆண்ட ஜூன் 5 அன்று நடைபெற்ற போட்டியில் ஓமன் அணியை 3-0 என்ற கணக்கில் ஜோர்டான் வீழ்த்தியதோடு, மற்றொரு போட்டியில் ஈராக் அணி தென் கொரியாவிடம் தோல்வியடைந்ததை அடுத்து, ஜோர்டானின் வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கோப்பை வாய்ப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

நட்சத்திரங்கள்: மூசா அல்-தம்ரி, அலி அல்வான், யாசான் அல்-நைமத்.

மோதல்

ஜூன் 16 vs ஆஸ்திரியா

ஜூன் 22 vs அல்ஜீரியா

ஜூன் 27 vs அர்ஜெண்டினா

SCROLL FOR NEXT