போர்ச்சுகல் அணிக்கு எதிரான ஆட்டத்தின் கூடுதல் நேரத்தின் இறுதி நிமிடங்களில் குரோஷியா அணின் இவான் பெரிசிச் பந்தை பெனால்டி பகுதிக்குள் உயரமாக அனுப்பினார். அதை மாரியோ பசாலிச் தலையால் முட்ட, பந்து யோஷ்கோ கிவார் டியோ வசம் சென்றது. அவர், அதை எளிதாக கோல் வலைக்குள் செலுத்தினார்.
இதனால் ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியதாக குரோஷியா வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கோல் உடனடியாக அங்கீகரிக்கப்படவில்லை. நீண்ட நேர விஏஆர் பரிசீலனை நடைபெற்றது. அதில், குரோஷிய வீரர் ஐகோர் மடனோவிச் பந்தை தொட்டதாகக் கூறப்பட்டதால், அவர் ஆஃப்சைட் நிலையில் இருந்ததாக முடிவு செய்யப்பட்டு கோல் மறுக்கப்பட்டது.
ஆனால், குரோஷிய வீரர் ஐகோர் மடானோவிச் உண்மையில் பந்தை தொட்டார் என்பதை நிரூபிக்கும் தெளிவான காட்சி எதுவும் இல்லாத நிலையிலும் கோல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பந்தில் பொறுத்தப்பட்டிருந்த சிப், ஐகோர் மடனோவிச்சின் தலை முடி பந்தில் பட்டதாக தரவுகளை அனுப்பியதே காரணம். நடப்பு தொடரில் விஏஆர் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.