விளையாட்டு

மைக்கேல் மெரினோவின் கடைசி நேர கோலால் கால் இறுதிக்கு ஸ்பெயின் முன்னேற்றம் | FIFA WC 2026

செய்திப்பிரிவு

டல்லாஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றில் நேற்று அமெரிக்​கா​வின் டல்​லாஸ் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்​பிய​னான ஸ்பெயின், போர்ச்சுகல் அணியை எதிர்த்து விளை​யாடியது. முதல் 20 நிமிடங்களில் ஸ்பெயின் அணி 59 சதவீதம் பந்தை தனதுகட்டுப்பாட்​டில் வைத்​திருந்​தது.

3 முறை இலக்கை நோக்கி பந்தை அடித்​தது. இதில், மிக்​கெல் ஒயார்​ச​பால், அலெக்ஸ் ஃபேனா ஆகியோரின் கோல் அடிக்​கும் முயற்​சிகளை போர்ச்சுகல் கோல்​கீப்​பர் டியாகோ கோஸ்டா சிறப்பாக தடுத்​தார். 37-வது நிமிடத்​தில் போர்ச்​சுகல் அணி​யின் ஜோவோ பெலிக்​ஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் அடுத்​தடுத்து கோல் அடிக்க முயற்சி மேற்​கொண்​டனர். ஆனால் அவர்​களது கோல் அடிக்​கும் முயற்​சிகளை ஸ்பெ​யின் அணி​யின் கோல் கீப்​பர் உனாய் சிமோன் சுவர்​போல நின்று தடுத்​தார். 42-வது நிமிடத்​தில் போர்ச்​சுகல் அணி​யின் நுனோ மெண்​டிஸ் அடித்த பந்து ஸ்பெ​யின் கோல் போஸ்ட் மீது பட்டு திரும்​பியது.

முதல் பாதி ஆட்​டத்​தில் இரு அணி​கள் தேரப்​பில் கோல் ஏதும் அடிக்​கப்​பட​வில்​லை. 56-வது நிமிடத்​தில் போர்ச்​சுகல் அணி​யின் முக்​கிய தற்​காப்பு வீர​ரான நுனோ மெண்​டிஸ் காயமடைந்​த​தால், அவருக்​குப் பதிலாக நெல்​சன் செமெடோ களம் இறக்​கப்​பட்​டார். இது அணி​யின் திட்​டத்​தில் மாற்​றத்தை ஏற்​படுத்​தி​யது. 75-வது நிமிடத்​தில் போர்ச்​சுகல் அணி​யின் வீரர் ரஃபேல் லியோ சாதுரிய​மாக பந்தை கடத்தி சென்று பெனால்டி பாக்ஸ் பகு​திக்​குள் இருந்த புருனோ பெர்​னாண்​டஸுக்கு கோல் அடிப்​ப​தற்​கான அரு​மை​யான வாய்ப்பை உரு​வாக்​கிக் கொடுத்​தார். ஆனால், துர​திர்​ஷ்ட​வச​மாக போர்ச்​சுகல் அணி​யால் அதை கோலாக மாற்ற முடி​யாமல் போனது.

நிர்​ண​யிக்​கப்​பட்ட 90 நிமிடங்​களின் முடி​வில் ஆட்​டம் 0-0 என்ற நிலை​யிலேயே இருந்​தது. இதன் பின்​னர் காயங்​களுக்கு இழப்​பீடாக 6 நிமிடங்​கள் வழங்​கப்​பட்​டன. இதில் 90+1-வது நிமிடத்​தில் ஸ்பெ​யின் அணி​யின் ஃபேபியன் ரூயிஸ் பந்தை அற்​புத​மாகக் கடத்தி ஃபெ​ரான் டோரஸிடம் கொடுக்க, அதை அவர் துல்​லிய​மாக மைக்​கேல் மெரினோவுக்கு கடத்​தி​னார்.

போர்ச்​சுகல் கோல் கீப்​பர் டியாகோ கோஸ்​டாவுக்கு எதி​ராக ஒன்​-டூ-ஒன் நிலை​யில் இருந்த மைக்​கேல் மெரினோ சிறிதும் பதற்​றமில்​லாமல் பந்தை கோல்​வலை​யின் வலது கார்​னருக்​குள் திணித்​தார். இதுவே ஸ்பெ​யின் அணி​யின் வெற்றி கோலாக​வும் அமைந்​தது. முடி​வில் ஸ்பெ​யின் அணி 1-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது. வரும் 11-ம் தேதி நடை​பெறும் கால் இறுதி ஆட்​ட​தில் பெல்​ஜி​யம் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது ஸ்பெ​யின்.

ரொனால்டோ ‘குட்​பை’

உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றில் ஸ்பெ​யின் அணிக்கு எதி​ராக 0-1 என்ற கோல் கணக்​கில் தோல்வி அடைந்த போர்ச்​சுகல் அணி தொடரில் இருந்து வெளி​யேறியது. இந்த போட்​டி​யுடன் போர்ச்​சுகல் அணி​யின் நட்​சத்​திர​மான 41 வயதாகும் கிறிஸ்​டி​யானோ ரொனால்டோ கண்​ணீர் மல்க ஓய்வு பெற்​றார். நடப்பு தொடரில் ரொனால்டோ 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 கோல்​களை அடித்​திருந்​தார்​. ஒட்​டுமொத்​த​மாக அவர்​, 6 உலகக்​ கோப்​பை தொடர்​களில்​ பங்​கேற்​று 25 ஆட்​டங்​களில்​ 11 கோல்​கள்​ அடித்​துள்​ளார்​.

சர்வதேச கால்பந்து அரங்கில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் கோப்பை ஆகியவற்றில் போர்ச்சுகல் அணிக்காக சாம்பியன் பட்டம் வென்று கொடுத்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ 6 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடிய போதிலும் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் விடைபெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT