விளையாட்டு

செக் குடியரசை வீழ்த்​தி​யது தென் கொரியா அணி | FIFA WC 2026

செய்திப்பிரிவு

குவாடலஜாரா: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் மெக்​சிகோ​வின் குவாடலஜாரா நகரில் நேற்று ‘ஏ’ பிரி​வில் நடைபெற்ற லீக் ஆட்​டத்​தில் செக் குடியரசு - தென் கொரியா அணி​கள் மோதின. முதல் பாதி ஆட்​டத்​தில் இரு அணி​கள் தரப்பில் கோல் ஏதும் அடிக்​கப்​பட​வில்​லை.

59-வது நிமிடத்​தில் செக் குடியரசு அணி​யின் விளாடிமிர் கோஃபல பெனால்டி பாக்ஸ் பகு​திக்​குள் நீண்ட த்ரோவை வழங்க அங்கு எதிரணி​யால் மார்க் செய்​யப்​ப​டா​மல் இருந்த கேப்​டன் லாடிஸ்​லாவ் க்ரேஜ்ஸி துள்​ளிய​வாறு தலை​யால் முட்டி கோல் அடித்து அசத்​தி​னார். இதனால் செக் குடியரசு அணி 1-0 என முன்னிலைபெற்​றது.

67-வது நிமிடத்​தில் தென் கொரியா அணி பதிலடி கொடுத்​தது. 2 செக் குடியரசு வீரர்​களை ஏமாற்​றும் வகை​யில் போலி​யான ஷாட் மேற்​கொள்​வது போன்று பாசாங்கு செய்து சாமர்த்​தி​ய​மான நகர்வுடன் கோல் அடித்து அசத்​தி​னார் வாங் இன் போம். இதனால் ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் சமநிலையை எட்​டியது.

இதைத் தொடர்ந்து 80-வது நிமிடத்​தில் வாங் இன் போம் வலது பக்க​வாட்​டில் இருந்து பாக்​ஸின் நடுப்​பகு​திக்கு கொடுத்த துல்லியமான கிராஸை தரை​யில் சறுக்​கிய​வாறு வந்​த​படி ஓ ஹியான்​-கியூ கோல் அடிக்க செக் குடியரசு அணி​யின் டிபன்டர்களும், கோல் கீப்​பரும் அதிர்ச்​சி​யில் உறைந்​தனர். இதுவே தென் கொரியா அணி​யின் வெற்றி கோலாக​வும் அமைந்தது. முடி​வில் தென் கொரியா 2-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது.

SCROLL FOR NEXT