டல்லாஸ்: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் எஃப் பிரிவில் நேற்று ஜப்பான், ஸ்வீடன் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
டல்லாஸில் உள்ள ஏடி அன்ட் டி மைதானத்தில் இந்த ஆட்டம் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது. ஜப்பான் அணிக்காக டைசன் மயேடா 56-வது நிமிடத்தில் ஒரு கோலும், ஸ்வீடன் அணிக்காக ஆண்டனி எலங்கா 62-வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
இந்தப் பிரிவில் முதல் 2 இடங்களை நெதர்லாந்து (7 புள்ளிகள்), ஜப்பான் (5 புள்ளிகள்) அணிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின. மேலும், ஸ்வீடன் அணியும் தங்களது பிரிவிலிருந்து 3-வது அணியாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்தது.