விளையாட்டு

அதிக பெனால்டி கோல் - ஹாரி கேன் சாதனை | FIFA WC 2026

செய்திப்பிரிவு

குரோஷியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஹாரி கேன் 2 கோல்கள் அடித்து அசத்தினார். இதுவரை அவர், உலகக் கோப்பையில் 10 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்தின் புகழ்பெற்ற முன்னாள் வீரர் கேரி லினேக்கரின் சாதனையை அவர், சமன் செய்துள்ளார்.

குரோஷியா அணிக்கு எதிராக 2 கோல்களை அடித்த ஹாரி கேன், முதல் கோலை பெனால்டி கிக் வாயிலாக அடித்திருந்தார். இதன் வாயிலாக உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் (பெனால்டி ஷூட்-அவுட்களைத் தவிர்த்து) அதிக பெனால்டி கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை ஹாரி கேன் படைத்துள்ளார்.

இதுவரை அவர், பெனால்டி கிக்கில் 5 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி, கேப்ரியல் பாடிஸ்டுடா, போர்ச்சுகலின் யூசிபியோ, நெதர்லாந்தின் ராப் ரென்சன்பிரிங்க் ஆகியோர் தலா 4 கோல்கள் அடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT