விளையாட்டு

எர்லிங் ஹாலந்து அபாரம்: நாக் அவுட் சுற்றில் நார்வே | FIFA WC 2026

செய்திப்பிரிவு

ஈஸ்ட் ரூதர்போர்டு: உல​கக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று அமெரிக்​கா​வின் நியூ ஜெர்​சி​யில் உள்ள மெட்ஃலைப் மைதானத்​தில் ‘ஐ’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் நார்வே - செனகல் அணி​கள் மோதின.

ஆட்​டத்​தின் 43-வது நிமிடத்​தில் செனகல் அணி​யின் தற்​காப்பு அரண் செய்த தவறுகளைப் பயன்​படுத்​தி, நார்வே அணி​யின் மார்கஸ் ஹோல்ம்​கிரென் பெடர்​சன் அபார​மான கோல் அடித்தார். இதனால் நார்வே அணி முதல் பாதி ஆட்​டத்​தில் 1-0 என முன்​னிலை வகித்​தது.

48-வது நிமிடத்​தில் நார்வே அணி​யின் மார்ட்​டின் ஓடே​கார்ட் கொடுத்த அரு​மை​யான பாஸை பெற்ற, நட்​சத்​திர வீர​ரான எர்​லிங் ஹாலந்து தனது இடது காலால் வலு​வாக உதைத்த பந்த கோல் வலையை துளைத்​தது. இதனால் நார்வே அணி 2-0 என முன்​னிலை பெற்​றது.

53-வது நிமிடத்​தில் செனகல் அணி பதிலடி கொடுத்​தது. அந்த அணி​யின் நட்​சத்​திர​மான சாடியோ மானே​வின் உதவி​யுடன் பந்தை பெற்ற இஸ்​மைலா சர் கோல் அடித்து அசத்​தி​னார். அடுத்த 5-வது நிமிடத்​தில் நார்வே அணி தனது 3-வது கோலை அடித்து மிரட்​டியது.

58-வது நிமிடத்​தில் 18 அடி தூர பாக்​ஸிற்​குள் செனகல் வீரர் குலி​பாலி பந்​தைச் சரி​யாகக் கட்​டுப்​படுத்த முடி​யாமல் நிலை​தடு​மாறிய​போது, நார்வே வீரர் பேட்​ரிக் பெர்க் சாதுரிய​மாகப் பந்தை மீட்​டெடுத்து எர்​லிங் ஹாலந்​துக்கு அனுப்ப, அவர் வலு​வாக அடித்த ஷாட் கோல் வலைக்​குள் பாய்ந்​தது. இதனால் நார்வே அணி 3-1 என முன்​னிலை பெற்​றது. நிர்​ண​யிக்​கப்​பட்ட 90 நிமிடங்​களில் நார்வே அணி 3-1 என முன்​னிலை​யில் இருந்​தது.

இதன் பின்​னர் காயங்​களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட 3-வது நிமிடத்​தில் செனகல் வீரர் நியாகட்டே 18 அடி தூர பாக்​ஸிற்​குள் வளை​வான கிராஸை அனுப்​பி​னார். அப்​போது நார்வே தற்​காப்பு வீரர் ஆயர் துள்​ளிய​வாறு தலை​யால் முட்ட முயன்​றார். அவர், பந்​தைக் கணிக்​கத் தவறிய​தால், அவருக்​குப் பின்​னால் இருந்த செனகல் வீரர் ஜேக்​சனுக்கு பந்து சென்​றது.

அதை அவர், தாம​திக்​காமல் முதல் டச்​சிலேயே இஸ்​மைலா சர்​ருக்​குப் பக்​க​வாட்​டில் தட்​டி​விட்​டார். கோல் கம்​பத்​துக்கு மிக அரு​கில் தயா​ராக இருந்த இஸ்​மைலா சர், அதை மிக எளி​தாக கோலாக்​கி​னார். இதனால் செனகல் அணி 2-3 என நெருங்கி வந்​தது. ஆனால் எஞ்​சி​யிருந்த 8 நிமிடங்​களில் அந்த அணி​யால் மேற்​கொண்டு கோல் அடிக்க முடி​யாமல் போனது. முடி​வில் நார்வே அணி 3-2 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது.

அந்த அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. நார்வே அணி தனது முதல் ஆட்​டத்​தில் இராக்கை 4-1 என்ற கோல் கணக்​கில் வீழ்த்​தி​யிருந்​தது. தற்​போதைய வெற்​றி​யின் மூலம் நார்வே அணி தனது பிரி​வில் 6 புள்​ளி​களு​டன் நாக் அவுட் சுற்​றில் கால்​ப​தித்​தது. நார்வே அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் வரும் 27-ம் தேதி பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை சந்​திக்​கிறது.

செனகல் அணி 2 ஆட்​டங்​களி​லும் தோல்​வியை சந்​தித்து இருந்​தா​லும் அந்த அணி அடுத்த சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பு உள்​ளது. செனகல் தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் வரும் 27-ம் தேதி இராக்​குடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்​றால் 3-வது சிறந்த அணிகளின் பட்​டியலில் இடம் பிடித்து நாக் அவுட் சுற்​றுக்​குள் நுழைய வாய்ப்பு உள்​ளது.

12 போட்​டி​யில் 24 கோல்​கள்

25 வயதாகும் எர்​லிங் ஹாலந்​து, நார்வே அணிக்​காக கடைசி​யாக விளை​யாடிய 12 சர்​வ​தேச போட்​டிகளில் 24 கோல்​கள் அடித்​துள்​ளார். அவர், ஒவ்​வொரு ஆட்​டத்​தி​லும் குறைந்த பட்​சம் ஒரு கோல் அடித்​துள்​ளார். அதேவேளை​யில் ஒட்​டுமொத்​த​மாக 52 சர்​வ​தேச போட்​டி​யில் விளை​யாடி உள்ள எர்​லிங் ஹாலந்து 59 கோல்​களை அடித்​துள்​ளார்.கடந்த 2018-ம் ஆண்டு நடை​பெற்ற உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் இங்​கிலாந்​தின் ஹாரி கேன் தனது முதல் 2 ஆட்​டங்​களி​லும் தலா 2 கோல்​கள் அடித்து சாதனை படைத்​திருந்​தார். இந்த சாதனையை தற்​போது நார்வே அணி​யின் எர்​லிங்

ஹாலந்து சமன் செய்​துள்​ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் நார்வே அணி​யின் எர்​லிங் ஹாலந்து இராக் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தி​லும், செனகலுக்​கு எதி​ரான ஆட்​டத்​தி​லும்​ தலா 2 கோல்​கள்​ அடித்​து அசத்​தி​னார்​.

SCROLL FOR NEXT