விளையாட்டு

“சுழலில் பிரபாத் ஜெயசூரியா இந்திய அணியை அச்சுறுத்துவார்” - முன்னாள் வீரர் ஃபர்வீஸ் மஹரூஃப்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்திய கிரிக்​கெட் அணி 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இலங்கை சென்​றுள்​ளது.

இரு அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி காலே சர்​வ​தேச மைதானத்​தில் தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் இலங்கை கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் ஆல்​ர​வுண்​ட​ரான ஃபர்​வீஸ் மஹரூஃப் தொலைக்​காட்சி நிகழ்ச்சி ஒன்​றில் கூறிய​தாவது: பழைய பந்​தில் ‘ரிவர்​ஸ் ஸ்விங்’ செய்​யும் திறன் கொண்ட ஜஸ்​பிரீத் பும்​ரா, இலங்கை டெஸ்ட் தொடரில் இல்​லாதது இந்​திய அணிக்​குப் மிகப்​பெரிய இழப்​பாக இருக்​கும்.

எனினும் குர்​னூர் பிரார் இந்​திய அணி​யின் முக்​கிய காரணி​யாக இருக்க முடி​யும். அவரிடம் பவுன்ஸ் பந்​து​வீச்​சு, வேகம் மற்​றும் போராடும் குணம் ஆகியவை உள்​ளன. அவரால் பேட்​ஸ்​மேன்​களுக்கு அச்​சுறுத்​தல் கொடுக்க முடியும்.

பயிற்சி போட்​டி​யில் அவர், வீசிய சில பந்​துகள் இலங்கை டெஸ்ட் அணி​யில் இடம்​பெற்​றுள்ள பேட்​டர்​களுக்கு மிக​வும் அசவு​கரி​யத்தை ஏற்​படுத்​தி​ன. அது​மட்​டுமின்றி உடலை குறி​வைத்​தும் குர்​னூர் பிரார் பந்​துகளை வீசுகிறார்.

பேட்​ஸ்​மேனின் உத்​வேகத்தை குலைக்க நினைக்​கும் போது, குறுகிய இடைவெளி​களில் வேக​மான ஓவர்​களில் குர்​னூர் பிரார் ஆபத்​தான ஆயுத​மாக இருப்​பார். காலே டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி ரவீந்​திர ஜடேஜா, குல்​தீப் யாதவ், மானவ் சுதார் அல்​லது சரண்ஷ் ஜெயின் ஆகிய 3 சுழற்​பந்து வீச்​சாளர்​களு​டன் களமிறங்​கக்​கூடும்.

நான் இலங்கை அணி​யின் வீரர்​கள் அறை​யில் இருந்​தால், ரிஷப் பந்த்தை நினைத்து மிக​வும் கவலைப்​படு​வேன். அவர், அரை மணி நேரத்​திலோ அல்​லது 45 நிமிடங்​களிலோ போட்​டி​யின் போக்கை முற்​றி​லும் மாற்​றக்​கூடிய வீரர்.

இலங்கை அணி நிச்​சய​மாக இரண்டு முதன்மை சுழற்​பந்​து​வீச்​சாளர்​கள் மற்​றும் இரண்டு பகு​திநேர சுழற்​பந்​து​வீச்​சாளர்​களு​டன் களம் இறங்​கும்.

இந்​திய பேட்​ஸ்​மேன்​களுக்கு மிகப்​பெரிய சவாலாக சுழற்​பந்​து​வீச்​சாளர்​கள்​தான் இருப்​பார்​கள். பிர​பாத் ஜெயசூரியா இந்​திய பேட்​ஸ்​மேன்​களுக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தலாக இருப்​பார். அவர்​தான் இலங்​கை​யின் பிர​தான சுழல் ஆயுதம்.

காலே மைதானத்​தில் பிர​பாத் ஜெயசூரியா கைப்​பற்​றிய விக்​கெட்​டு​களின் எண்​ணிக்கை காரண​மாக அவரை நாங்​கள் ‘காலே​வின் ராஜா’ என்று அழைப்​போம்.

காலே மைதானத்​தில் காற்று முக்​கிய காரணி​யாக இருக்​கும். ஏனெனில் சுழற்​பந்​து​வீச்​சாளர்​கள் பந்தை காற்​றில் மிதக்​க​விட்டு வில​கச் செய்​வார்​கள். இந்த வகை​யில், இந்த மைதானத்​தில் காற்​றைப் பயன்​படுத்தி எப்​படிப் பந்​து​வீசுவது என்​பது பிர​பாத் ஜெயசூரி​யா​வுக்கு நன்​றாகத் தெரி​யும்.

காலே மைதானத்​தில் பக்​க​வாட்​டில் காற்று வீசும் என்​ப​தால், இந்​திய சுழற்​பந்​து​வீச்​சாளர்​கள் அந்​தச் சூழலுக்கு விரை​வாகப் பழகிக்​கொள்ள வேண்​டும். அவர்​கள் அந்​தக்​காற்​றுக்கு எவ்​வளவு விரை​வாகத் தங்​களை மாற்​றிக்​கொள்​கிறார்​கள்​ என்​பது மிக​வும்​ முக்​கிய​மானது. இவ்​வாறு ஃபர்​வீஸ்​ மஹரூஃப்​ கூறி​னார்.

SCROLL FOR NEXT