விளையாட்டு

170 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து மகளிர் அணி

செய்திப்பிரிவு

லார்ட்ஸ்: இந்​தியா - இங்​கிலாந்து மகளிர் அணி​கள் இடையி​லான டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி லண்​டன் லார்ட்ஸ் மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது.

முதலில் பேட் செய்த இந்​திய மகளிர் அணி முதல் இன்​னிங்​ஸில் 74.5 ஓவர்​களில் 285 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஸ்மிருதி மந்​தனா 83, கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 58, தீப்தி சர்மா 57 ரன்​கள் எடுத்​தனர்.

இதையடுத்து பேட் செய்த இங்​கிலாந்து மகளிர் அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 11 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 21 ரன்​கள் எடுத்​தது. நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய இங்​கிலாந்து மகளிர் அணி 59.1 ஓவர்​களில் 170 ரன்​களுக்கு சுருண்​டது. அதி​கபட்​ச​மாக எமி ஜோன்ஸ் 52, கேப்​டன் நாட் ஷிவர் பிரண்ட் 44 ரன்​கள் சேர்த்​தனர்.

இந்​திய மகளிர் அணி தரப்​பில் கிரந்தி கவுடு 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். சாயாலி சத்​கரே, ஸ்னே ராணா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.

115 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை இந்​திய மகளிர் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 42 ஓவர்களுக்கு 1 விக்​கெட் இழந்து 154 ரன்கள் எடுத்​திருந்​தது. ஸ்மிருதி மந்​தனா 69, யாஸ்திகா 39 ரன்​களு​டன் களத்​தில்​ இருந்​தனர்​. ஷபாலி வர்மா, 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

SCROLL FOR NEXT