விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வெற்றி!

வேட்டையன்

மெல்பர்ன்: நடப்பு ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் அணி 4 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இது ஆஸ்திரேலியாவில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

175 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியது பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி. கடைசியாக கடந்த 2011 ஜனவரியில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் இப்போதுதான் சுமார் 5,468 நாட்களுக்கு பிறகு இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் 18 டெஸ்ட் போட்டிகளில் 16 தோல்வி மற்றும் 2 போட்டிகளை டிரா செய்துள்ளது இங்கிலாந்து.

மெல்பர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியாக அமைந்த இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 152 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 110 ரன்கள் எடுத்தது. 42 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 175 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது.

32.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 40 ரன்கள் எடுத்திருந்தார். கிராவ்லி 37, டக்கெட் 34 ரன்கள் எடுத்தனர்.

இரண்டு நாட்களில் முடிந்த ஆட்டம்: மெல்பர்னில் நடந்த இந்த ஆட்டம் இரண்டு நாட்களில் முடிந்தது. முதல் நாளில் 20 விக்கெட் மற்றும் இரண்டாம் நாளில் 16 விக்கெட் என மொத்தமாக 36 விக்கெட்டுகள் இரண்டு நாட்களில் சரிந்தது. இதனால் ஆடுகளம் குறித்த விவாதம் இப்பொது எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT