பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட இங்கிலாந்து அணியின் ஜேக்கப் பெத்தேல்.

 
விளையாட்டு

இங்கிலாந்துக்கு சவால் அளிக்குமா இலங்கை அணி?

பல்லேகலேவில் இன்று மோதல்

செய்திப்பிரிவு

பல்லேகலே: ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு கண்​டி​யில் உள்ள பல்​லேகலே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்​பியன்​களான இங்​கிலாந்து - இலங்கை அணி​கள் மோதுகின்​றன.

நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் இங்​கிலாந்து அணி தனது அனைத்து லீக் ஆட்​டங்​களை​யும் இந்​தி​யா​வில் விளை​யாடி இருந்த நிலை​யில் தற்​போது சூப்​பர் 8 ஆட்​டங்​களை இலங்​கை​யில் விளை​யாட உள்​ளது. இந்த மாதத்​தின் தொடக்​கத்​தில் இலங்கை மண்​ணில் அந்த அணிக்கு எதி​ராக நடை​பெற்ற இருதரப்பு டி 20 தொடரை ஹாரி புரூக் தலை​மையி​லான இங்​கிலாந்து அணி 3-0 என்ற கணக்​கில் முழு​மை​யாக வென்​றிருந்​தது.

          

இதனால் சுழலுக்கு சாதக​மான இலங்கை ஆடு​களத்​தில் இங்​கிலாந்து அணி எந்​த​வித நெருக்​கடி​யும் இன்றி சிறப்​பாக செயல்பட முயற்​சிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. எனினும் 2 முறை சாம்​பிய​னான இங்​கிலாந்து அணி லீக் சுற்​றில் தடு​மாறியே வெற்றி கண்​டிருந்​தது.

மேற்கு இந்​தி​யத் தீவு​களிடம் தோல்வி அடைந்​திருந்த இங்​கிலாந்து அணி, கத்​துக்​குட்​டி​யான நேபாளத்​திடம் 4 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் போராடியே வெற்றி பெற்​றிருந்​தது. ஸ்காட்​லாந்​து, இத்​தாலி அணி​களுக்கு எதி​ரான ஆட்​டங்​களி​லும் இங்​கிலாந்து அணி ஆதிக்​கப் போக்​குடன் வெற்றி பெற​வில்​லை.

தசன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்​றில் முன்​னாள் சாம்​பிய​னான ஆஸ்​திரேலி​யாவை 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்து அதிர்ச்சி கொடுத்​திருந்​தது. மேலும் அயர்​லாந்​து, ஓமன் அணி​களை​யும் வீழ்த்​தி​யிருந்​தது. அதேவேளை​யில்கடைசி ஆட்​டத்​தில் ஜிம்​பாப்வே அணி​யிடம் தோல்வி கண்​டிருந்​தது.

தொடக்க வீர​ரான பதும் நிசங்கா ஆஸ்​திரேலிய அணிக்கு சதம் அடித்து அசத்​தி​யிருந்​தார். மேலும் ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ராக அரை சதமும் எடுத்​திருந்​தார். நடப்பு தொடரில் 199 ரன்​கள் சேர்த்து அதிக ரன்​கள் குவித்​தவர்​களின் பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளார். அவரிடம் இருந்து மேலும் ஒருசிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும்.

இதே​போன்று குஷால் மெண்​டிஸும் 3 அரை சதங்​கள் அடித்து சிறந்த பார்​மில் உள்​ளார். இவர்​கள் இரு​வரும் இங்​கிலாந்து அணி​யின் பந்​து​வீச்சு துறைக்கு நெருக்​கடி கொடுக்​கக்​கூடும். பந்​து​வீச்​சில் தீக்​ச​னா, தில்​ஷான் மதுஷங்கா பலம் சேர்க்​கக்​கூடும். கடந்த ஆட்​டத்​தில் ஓய்வு கொடுக்​கப்​பட்​டிருந்த துஷ்மந்தா சமீரா களமிறங்​கக்​கூடும்.

இங்​கிலாந்து அணி​யின் பேட்​டிங்​கில் ஜேக்​கப் பெத்​தேல் மட்​டுமே சீராக ரன்​கள் சேர்த்​துள்​ளார். அவர், 4 ஆட்​டங்​களில் ஒரு அரைசதத்​துடன் 143 ரன்​கள் எடுத்​துள்​ளார். கேப்​டன் ஹாரி புரூக், அனுபவ​மிக்க ஜாஸ் பட்​லர் ஆகியோரிடம் இருந்து இது​வரை பெரிய அளவி​லான செயல்​திறன் வெளிப்​பட​வில்​லை.

பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் சுழலில் ஆதில் ரஷித், லியாம் டாவ்​சன், வில் ஜேக்ஸ் ஆகியோர் இலங்கை பேட்​ஸ்​மேன்​களுக்கு சவால் அளிக்​கக்​கூடும். அதேவேளை​யில் வேகப்​பந்​து​வீச்​சில் ஜோப்ரா ஆர்ச்​சர் நெருக்​கடி கொடுக்​கக்​கூடும். இதற்​கிடையே கண்​டி​யில் இன்று பிற்​பகலில் மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக இலங்கை வானிலை மையம் தெரி​வித்​துள்​ளது. இதனால்​ இன்​றைய போட்​டியும் பா​திக்​கப்​படக்​கூடும்.

SCROLL FOR NEXT