விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் வீரர்​கள் தரவரிசை: இங்​கிலாந்து வீரர் புரூக் 2-வது இடத்துக்கு முன்​னேற்​றம்

செய்திப்பிரிவு

துபாய்: ஐசிசி டெஸ்ட் கிரிக்​கெட் வீரர்​கள் தரவரிசை​யில் இங்​கிலாந்து வீரர் ஹாரி புரூக் 2-ம் இடத்​துக்கு முன்​னேறி​யுள்​ளார்.

இங்​கிலாந்​து, ஆஸ்​திரேலிய அணி​களுக்கு இடையி​லான 5-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்​துள்ள நிலை​யில் தரவரிசைப் பட்டியலை சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில்​(ஐசிசி) நேற்று வெளியிட்​டது. இதில் இங்​கிலாந்து வீரர் ஹாரி புரூக் 846 புள்ளிகளு​டன் 2-ம் இடத்​துக்கு முன்​னேறி​யுள்​ளார்.

முதலிடத்​தில் இங்​கிலாந்து வீரர் ஜோ ரூட் 867 புள்​ளி​களு​டன் தொடர்ந்து முதலிடத்​தில் நீடிக்​கிறார். 3-ம் இடத்​தில் நியூஸிலாந்து வீரர் கேன் வில்​லி​யம்​ஸனும்​(822 புள்​ளி​கள்), 4-வது இடத்​தில் ஆஸ்திரேலிய வீரர் டிரா​விஸ் ஹெட்​டும் (816 புள்​ளி​கள்), 5-வது இடத்​தில் ஆஸ்​திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்​தும் (811 புள்​ளி​கள்) உள்​ளனர். 10-ம் இடத்​தில் இந்​திய அணியின் கேப்​டன் ஷுப்​மன் கில்​ (730 புள்​ளி​கள்) உள்ளார்.

அதே​ நேரத்​தில் பந்​து​ வீச்​சாளர்​கள் தரவரிசை​யில், இந்​திய வீரர் ஜஸ்​பிரீத் பும்ரா 879 புள்​ளி​களு​டன் தொடர்ந்து முதலிடத்​தில் இருக்கிறார். 2-ம் இடத்​தில் ஆஸ்​திரேலிய வீரர் மிட்​செல் ஸ்டார்க்கும், 3-ம் இடத்​தில் பாகிஸ்​தான் வீரர் நோமன் அலி​யும், 4-ம் இடத்​தில் பாட் கம்​மின்​ஸும், 5-ம் இடத்​தில் மேட் ஹென்​றி​யும் உள்​ளனர்.

பந்​து ​வீச்​சாளர்​கள் தரவரிசை​யில் இந்​திய வீரர்​கள் முகமது சிராஜ் 12-வது இடத்​தி​லும், ரவீந்​திர ஜடேஜா 13-ம் இடத்​தி​லும் உள்ளனர்.

SCROLL FOR NEXT