விளையாட்டு

துலீப் டிராபி தொடரின் அரை இறுதியில் கிழக்கு மண்டலம்

செய்திப்பிரிவு

பெங்களூரு: துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் கால் இறுதி சுற்றில் கிழக்கு மண்​டலம் - வடகிழக்கு மண்டலம் மோதிய ஆட்டம் பெங்​களூரு​வில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்னிங்​ஸில் கிழக்கு மண்டலம் 467 ரன்​கள் குவித்​தது. அதிகபட்சமாக ஷாபாஸ் அகமது 167, சுதீப் குமார் கராமி 146 ரன்கள் விளாசினர்.

அதேவேளை​யில் வடகிழக்கு மண்​டலம் அணி 42.5 ஓவர்​களில் 111 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து பாலோ-ஆன் ஆனது. பாலோ-ஆன் பெற்ற வடகிழக்கு மண்​டலம் 356 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடியது. இம்​முறை அந்த அணி 50 ஓவர்​களில் 146 ரன்​களுக்கு சுருண்​டது.

அதி​கபட்​ச​மாக ஜோதின் 39, ஆகாஷ் சவுத்ரி 27, கிஷான் லின்​டாக் 25, ஆஷிஸ் தாபா 20 ரன்​கள் சேர்த்​தனர். பந்​து​வீச்​சில் கிழக்கு மண்​டலம் அணி தரப்​பில் இடது கை சுழற்​பந்து வீச்​சாள​ரான அணுகுல் ராய் 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். வைபவ் சூர்யவன்ஷி 2 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். இன்​னிங்ஸ் மற்றும் 210 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற கிழக்கு மண்டல அணி அரை இறுதி சுற்​றுக்​கு முன்​னேறியது.

SCROLL FOR NEXT