விளையாட்டு

திருப்பூர் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது திண்டுக்கல் அணி | TNPL 2026

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: டிஎன்​பிஎல் 10-வது சீசன் போட்டி நேற்று திண்டுக்கலில் தொடங்​கியது. முதல் ஆட்​டத்​தில் திருப்​பூர் தமிழன்ஸ் - திண்​டுக்​கல் டிராகன்ஸ் அணி​கள் மோதின.

முதலில் பேட் செய்த திருப்​பூர் தமிழன்ஸ் அணி, திண்​டுக்​கல் டிராகன்ஸ் அணி​யின் பந்து வீச்சை தாக்​குப்​பிடிக்க முடி​யாமல் 15.4 ஓவர்​களில் 107 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக மோகன் பிர​சாத் 17, உத்​திர​சாமி சசிதேவ் 17, இசக்கி​முத்து 15, முகமது அலி 11 ரன்​கள் சேர்த்​தனர். மற்ற பேட்ஸ்மேன்​கள் இரட்டை இலக்கை ரன்னை எட்​ட​வில்​லை. திண்டுக்கல் அணி தரப்​பில் புவனேஷ்வரன், நிரங்​கர் சர்மா ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். சக்தி கருப்​ப​சாமி 2 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார்.

இதையடுத்து 108 ரன்​கள் இலக்குடன் திண்​டுக்​கல்​ அணி பேட்​டிங்​ செய்​ய ஆயத்​த​மானது. அந்த அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி சார்பில் அனுராக் 34, விமல் குமார் 33 ரன்கள் எடுத்தனர். சைனி, 16 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். நிரங்கர் சர்மா, ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

SCROLL FOR NEXT