விளையாட்டு

ஆசிரமத்தை பிரபலப்படுத்த ரூ.5 கோடி பெற்றாரா கோலி?

செய்திப்பிரிவு

லக்னோ: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் நட்​சத்​திர வீரர் விராட் கோலி​யும், அவரது மனை​வி​யும் நடிகை​யு​மான அனுஷ்கா சர்​மா​வும் பிரே​மானந்த் மகராஜின் பக்​தர்​களாக உள்​ளனர். இரு​வரும் உத்​தரப் பிரதேச மாநிலம் விருந்​தாவனில் உள்ள அவரது ஆசிரமத்​துக்கு பலமுறை சென்று வந்​துள்​ளனர்.

இந்த நிலை​யில், விராட் கோலி கடந்த 2023-ம் ஆண்டு முதல்​முறை​யாக ஆசிரமத்​துக்கு வந்​த​போது அவருக்கு ரூ.5 கோடி வழங்​கப்​பட்​ட​தாக ஃபலஹாரி மகராஜ் தினேஷ் சர்மா என்​பவர் சமீபத்​தில் குற்​றம்​சாட்​டி​யிருந்​தார். ஆசிரமத்தை பிரபலப்​படுத்​து​வதற்​காகவே இந்த தொகை வழங்​கப்​பட்​ட​தாக​வும் அவர், கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் விராட் கோலி தரப்​பில் இதற்கு மறுப்பு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து கோலி​யின் செய்​தித் தொடர்​பாளர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “வி​ராட் கோலி தொடர்​பாக ஃபலஹாரி மகராஜ் தினேஷ் சர்மா முன்​வைத்​துள்ள குற்​றச்​சாட்​டு​கள் முற்​றி​லும் பொய்​யானவை, ஆதா​ரமற்​றவை மற்​றும் உண்​மைக்​குப் புறம்​பானவை என்​பதை திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துக் கொள்​கிறோம். பிரே​மானந்த் மகராஜ் மீது வைத்​துள்ள ஆழ்ந்த நம்​பிக்கை மற்​றும் மரி​யாதை காரண​மாக விராட் கோலி தனது மனை​வி​யுடன் ஆசிரமம் சென்று வந்​தார்” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பிரே​மானந்த் மகராஜ் ஆசிரமத்​துக்கு விராட் கோலி முக்​கிய​மான தருணங்​களி​லும் சென்று வந்​துள்​ளார். கடந்த 2025-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்​கெட்​டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர், ஆசிரமத்​துக்​குச் சென்​றிருந்​தார். கடைசி​யாக தனது மனை​வி​யுடன் வி​ராட் கோலி கடந்த ஜூலை மாதம் ஆசிரமம்​ சென்​றிருந்​தார்​.

SCROLL FOR NEXT