சென்னை: 80-வது மாநில சீனியர் நீச்சல் போட்டி சென்னை எஸ்ஆஎம் கல்லூரி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்று வருகிறது. தொடக்க நாளான நேற்று ஆடவருக்கான 50 மீட்டர் பிரஸ்ட்ரோக் பிரிவில் எஸ்டிஏடி சென்னை அணி வீரர் தனுஷ் சுரேஷ் பந்தய தூரத்தை 28.40 வினாடிகளில் கடந்து எஸ்டிஏடி டால்ஃபின் அணி வீரர் யாதேஷ் பாபுவின் பழைய சாதனையான 28.57 வினாடிகளை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
மகளிருக்கான 200 மீட்டர் பிரஸ்ட்ரோக் நீச்சலில் எஸ்டிஏடி சென்னை அணி வீராங்கனை ஸ்ரீநிதி நடேசன் பந்தய தூரத்தை 2 நிமிடம் 45.71 வினாடிகளில் கடந்து டர்ட்டில்ஸ் அணி வீராங்கனை ராகவியின் 2 நிமிடம் 49.13 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து புதிய மீட் சாதனை படைத்துள்ளார்.