தேவ்தத் படிக்கல்

 
விளையாட்டு

தேவ்தத் படிக்கல் 131 ரன்கள் விளாசல்: முதல் நாளில் இந்தியா 288 ரன்கள் குவிப்பு | SL vs IND

செய்திப்பிரிவு

காலே: இலங்கை - இந்தியா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி காலே சர்​வ​தேச மைதானத்​தில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்ற இந்​திய அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் பேட்​டிங்கை தேர்வு செய்​தார். கடந்த மாதம் ஆப்​கானிஸ்​தான் அணிக்கு எதி​ரான டெஸ்ட் போட்​டி​யில் விளை​யாடிய அதே வீரர்​களே தற்​போதும் இடம் பெற்​றிருந்​தனர். சாய் சுதர்​சனுக்கு பதிலாக மட்​டும் தேவ்​தத் படிக்​கல் களமிறக்​கப்​பட்​டார். மற்​றபடி மாற்​றங்​கள் ஏதும் இல்​லை.

இலங்கை அணி​யில் சுழற்​பந்​து​வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான கேஷர நுவந்தா அறி​முக வீர​ராக இடம் பெற்​றார். பேட்​டிங்கை தொடங்​கிய இந்​திய அணிக்கு யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல் ஜோடி நிதான​மான தொடக்​கம் கொடுத்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 37 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 32 ரன்​கள் எடுத்த நிலை​யில் துர​திருஷ்ட​வச​மாக ரன் அவுட் ஆனார். முதல் விக்​கெட்​டுக்கு கே.எல்​.​ராகுல், யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் ஜோடி 11 ஓவர்​களில் 47 ரன்​கள் சேர்த்​தது.

இதையடுத்து களமிறங்​கிய தேவ்​தத் படிக்​கல் இலங்கை அணி​யின் பந்​து​வீச்சை சிரமம் இல்​லாமல் எதிர்​கொண்டு ரன்​கள் சேர்த்​தார். மதிய உணவு இடைவேளை​யில் இந்​திய அணி 27 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 101 ரன்​கள் குவித்​தது. கே.எல்​.​ராகுல் 32, தேவ்​தத் படிக்​கல் 35 ரன்​கள் சேர்த்து இருந்​தனர்.

மதிய உணவு இடைவேளை​யின் போது மழை பெய்​தது. இதனால் உணவு இடைவேளைக்கு பின்​னர் திட்​ட​மிட்​டபடி ஆட்​டத்தை தொடங்​கு​வ​தில் சிக்​கல் எழுந்​தது. மழை நின்ற பின்​னர் சுமார் ஒரு மணிநேரத்​துக்கு பின்​னர் ஆட்​டம் மீண்​டும் தொடங்​கப்​பட்​டது. தேவ்​தத் படிக்​கல் 81 பந்​துகளி​லும், கே.எல்​.​ராகுல் 127 பந்​துகளி​லும் அரை சதம் கடந்​தனர்.

நிதான​மாக பேட் செய்த கே.எல்​.​ராகுல் 162 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 9 பவுண்​டரி​களு​டன் 77 ரன்​கள் எடுத்த நிலை​யில் ‘ரிட்​டயர்டு ஹர்ட்’ முறை​யில் வெளி​யேறி​னார். தேநீர் இடைவேளை​யில் இந்​திய அணி​யின் ஸ்கோர் 53 ஓவர்​களில் 197 ஆக இருந்​தது. 2-வது விக்​கெட்​டுக்கு கே.எல்​.​ராகுல், தேவ்​தத் படிக்​கல் ஜோடி 255 பந்​துகளை எதிர்​கொண்டு 150* ரன்​கள் சேர்த்​திருந்​தது.

இதையடுத்து கேப்​டன் ஷுப்​மன் கில் களமிறங்​கி​னார். சிறப்​பாக விளை​யாடிய தேவ்​தத் படிக்​கல் 134 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 9 பவுண்​டரி​களு​டன் சதம் விளாசி​னார். சர்​வ​தேச டெஸ்ட் அரங்​கில் இது அவரது முதல் சதமாக அமைந்​தது.

ஷுப்​மன் கில் 28 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 16 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிர​பாத் ஜெயசூரியா பந்தை மிட் ஆஃப் திசை​யில் தூக்கி அடிக்க முயன்ற போது லகிரு உதரா​விடம் கேட்ச் ஆனது. 3-வது விக்​கெட்​டுக்கு இந்த ஜோடி 39 ரன்​கள் எடுத்​தது. இதையடுத்து ரிஷப் பந்த் களமிறங்​கி​னார்.

இந்​திய அணி 63 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 239 ரன்​கள் எடுத்​திருந்த போது மழை காரண​மாக ஆட்​டம் தடைபட்​டது. மழை நின்ற பின்​னர் மீண்​டும் ஆட்​டம் தொடங்​கிய நிலை​யில் தேவ்​தத் படிக்​கல், ரிஷப் பந்த் ஜோடி சீராக ரன்​கள் சேர்த்​தது. முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் இந்​திய அணி 73 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 288 ரன்​கள் குவித்​தது.

தேவ்​தத் படிக்​கல் 178 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 12 பவுண்​டரி​களு​டன் 131 ரன்​களும், ரிஷப் பந்த் 36 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 27 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். கைவசம் 8 விக்​கெட்​கள் இருக்க இன்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்​து விளை​யாடு​கிறது இந்​திய அணி.

15 நிமிடங்கள் முன்னதாக..

காலே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மழை காரணமாக 17 ஓவர்கள் குறைவாக வீசப்பட்டது. இதனால் இன்றைய 2-வது நாள் ஆட்டம் 15 நிமிடங்களுக்கு முன்னதாக காலை 9.45 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் காயம்

காலே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 77 ரன்கள் எடுத்திருந்த போது தசைப்பிடிப்பு மற்றும் வலது கையில் ஏற்பட்ட அசவுகரியம் காரணமாக 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார். தேநீர் இடைவேளைக்கு முன்னதாக தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட கே.ராகுலுக்கு மைதானத்தில் உடலியக்க சிகிச்சையாளர் முதலுதவி அளித்தார். ஆனால் அதற்கு பலன் இல்லாததால் கே.எல்.ராகுல் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT