பெங்களூரு: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதவுள்ளன.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. சென்னை அணிக்கு இது 3-வது லீக் போட்டியாகும். முதல் 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்ட நிலையில், இந்தப் போட்டியில் வெற்றிக் கணக்கைத் தொடங்கும் முனைப்பில் சிஎஸ்கே களமிறங்குகிறது.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை நன்றாக இருந்தபோதிலும் பந்துவீச்சு துறை மோசமாகவுள்ளது. கலீல் அகமது, மேட் ஹென்றி, அன்ஷுல் காம்போஜ், நூர் அகமது, ராகுல் சாஹர் ஆகியோரது பந்துவீச்சை எதிரணி வீரர்கள் எளிதில் அடித்து நொறுக்கி விடுகின்றனர். பஞ்சாப் அணியுடனான ஆட்டத்தில் 209 ரன்கள் குவித்தும் சிஎஸ்கே அணியால் வெற்றி பெற முடியவில்லை. எனவே, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு சிஎஸ்கே அணி தீவிரமாக முயற்சிக்கக்கூடும்.
அதேநேரத்தில் சொந்த மைதானத்தில் ஆர்சிபி அணி களமிறங்குகிறது. முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் அந்த அணி களம் காணவுள்ளது. பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட் என பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. அதேபோல் பந்துவீச்சில் ஜேக்கப் டஃப்பி, புவனேஸ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்ட், அபிநந்தன் சிங், சுயாஷ் சர்மா, கிருணல் பாண்டியா ஆகியோர் எதிரணி பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் தரக்கூடும்.
ஹைதராபாத்-லக்னோ மோதல்: முன்னதாக ஹைதராபாத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.