விளையாட்டு

சிஎஸ்கே - டிஎன்எஸ்ஜேஏ சார்பில் இளம் வீரர்களுக்கு ஊக்கத்தொகை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சூப்​பர் கிங்ஸ் - தமிழ்​நாடு விளையாட்டு பத்​திரி​கை​யாளர்​கள் சங்க (டிஎன்எஸ்ஜேஏ) விருதுகள் மற்​றும் உதவித்​தொகை வழங்​கும் விழா நேற்று சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதான வளாகத்​தில் நடைபெற்​றது.

இதில் வளர்ந்து வரும் 10 இளம் விளை​யாட்டு வீரர்​களுக்கு தலா ரூ.50,000 உதவித்​தொகை வழங்​கப்​பட்​டது. யு-9 செஸ் வீரர் தமிழ் அமுதன், ஆசிய இளை​யோர் செஸ் சாம்​பியன் ஆர்​.ஆரண்​யா, மன்​னார்​குடியை சேர்ந்த 15 வயதான கால்பந்து வீராங்​கனை எஸ்​.தர்​ஷினி, சஷாங்க் சரவணக்​கு​மார் (பாரா சைக்​கிளிங்), டி.தரணிதரன் (ஈட்டி எறிதல்), ஷ்ரியா ஆனந்த் (டேபிள் டென்​னிஸ்), டி.சவுமியா (வாலி​பால்), பி.ஹரிஷ் (அலைச்​சறுக்​கு), எஸ்​.அஸ்​ரன்​கா, பி.கே. கிஷோர் (கிரிக்​கெட்) ஆகியோர் உதவித் தொகையை பெற்​றனர்.

          

நிகழ்ச்​சி​யில் சிஎஸ்கே முழுநேர இயக்​குநர் ரூபா குரு​நாத், சிஇஓ காசி விஸ்​வ​நாதன், யு-19 உலகக்​கோப்​பையை வென்று தந்த இந்​திய கேப்​ட​னும், தற்​போதைய சிஎஸ்கே வீரரு​மான ஆயுஷ் மாத்​ரே, ஒலிம்​பிக்​கில் தங்​கம் வென்ற வி.​பாஸ்​கரன், டேபிள் டென்​னிஸ் ஜாம்​ப​வான் சரத் கமல், முன்​னாள் வாலி​பால் வீரர் எம்​.உக்​ர​பாண்​டியன், இந்​திய கால்​பந்து வீராங்​கனை ஆர்​.சந்​தி​யா, பிசிசிஐ ஜூனியர் தேர்​வுக்​குழு தலை​வர் சரத், யு-19 இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​டன் எம்​.செந்​தில்​நாதன், தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்க தலை​வர் டி.ஜே. சீனி​வாச​ராஜ், செய​லா​ளர் யு. பகவன்​தாஸ்​ ​ராவ்​, ​டாக்​டர்​ ஆர்​.என்​.​பா​பா உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்.​

SCROLL FOR NEXT