கோப்புப்படம்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிர்வாகம் தனது முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்களை ஒன்றிணைக்கும் வகையில் ‘ரோர் 26’ என்ற பெயரில் பிரமாண்ட ரீயூனியன் நிகழ்ச்சியை இன்று (மார்ச் 22) சென்னையில் நடத்தவுள்ளது.
இந்த விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் சிஎஸ்கே முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹேடன், முரளி விஜய், எஸ்.பத்ரிநாத் உள்ளிட்ட வீரர்களும், அணியில் இடம்பெற்றுள்ள இன்றைய வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இதில் சிறப்பம்சமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2026 சீசன் தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்த இந்த நிகழ்ச்சியை சிஎஸ்கே அணி நிர்வாகம் நடத்துகிறது.