சிஎஸ்கே அணி வீரர்கள்

 
விளையாட்டு

எல்எஸ்ஜி அணிக்கு எதிராக படுதோல்வி: பிளே-ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே முன்னேறும் வாய்ப்பு எப்படி?

வேட்டையன்

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி). இந்த சூழலில் பிளே-ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே முன்னேறுமா? அதற்கான வாய்ப்பு குறித்து விரிவாக பார்ப்போம்.

நடப்பு சீசனில் இருந்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஏற்கெனவே வெளியேறி விட்டன. இந்த சூழலில், பிளே-ஆஃப் சுற்றுக்கு இதுவரை எந்த அணியும் முன்னேறவில்லை. புள்ளிப் பட்டியலை பொறுத்தவரையில் முதல் இரண்டு இடங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் உள்ளன. அதற்கடுத்த இடங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் உள்ளன.

வரும் 24-ம் தேதி உடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெறுகின்றன. 26-ம் தேதி முதல் பிளே-ஆஃப் சுற்று தொடங்குகிறது. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிளே-ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி முன்னேறும் வாய்ப்பு எப்படி? - நடப்பு சீசனில் 12 ஆட்டங்களில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது சிஎஸ்கே. இதன் மூலம் மொத்தம் 12 புள்ளிகளை பெற்றுள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. லீக் சுற்றில் இன்னும் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே சிஎஸ்கே விளையாட வேண்டி உள்ளது. மே 18-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மே 21-ல் குஜராத் டைட்டன்ஸ் உடன் சிஎஸ்கே விளையாடுகிறது.

எல்லிஸ், தோனி, கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே, ஜேமி ஓவர்டன் என சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதில் தோனியை தவிர மற்ற அனைவரும் இந்த சீசனில் இருந்து விலகி உள்ளனர். தோனியின் மேட்ச் ஃபிட்னஸ் காரணமாக அவர் இன்னும் ஒரு ஆட்டத்தில் கூட இந்த சீசனில் விளையாடவில்லை. வீரர்களின் காயங்கள் சிஎஸ்கே அணிக்கு பாதகமாக அமைந்தது.

இந்த சூழலில் வெள்ளிக்கிழமை அன்று எல்எஸ்ஜி உடனான தோல்வி காரணமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே முன்னேறுவதில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

சிஎஸ்கே அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். அதோடு மற்ற அணிகள் ஆடும் ஆட்டங்களில் முடிவு சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமைய வேண்டும். ஏனெனில், 12 ஆட்டங்களில் விளையாடி 13 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி 4-ம் இடத்தில் உள்ளது. அந்த அணி விளையாடவுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் போதும். அதுவே ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் கூட மற்ற அணிகளுக்கான வாய்ப்புகள் திறக்கும். ஆனால், அந்த அணி தொடர் தோல்வியை தழுவி வருகிறது.

5-ம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி 11 ஆட்டங்களில் 12 புள்ளிகளை பெற்றுளளது. அந்த அணி இன்னும் 3 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் ராஜஸ்தான் அணி ஒரு ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் சிஎஸ்கே அணிக்கான பிளே-ஆஃப் வாய்ப்பு உயிர்ப்போடு இருக்கும். இருப்பினும் இதற்கு சிஎஸ்கே இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று, நெட் ரன் ரேட்டையும் பிளே-ஆஃப் போட்டியில் மற்ற அணிகளை காட்டிலும் சிறந்ததாக கூட்ட வேண்டும். ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன. சன்ரைசர்ஸ் அணி 14 புள்ளிகளை பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT