ஜாஹிர் கான்

 
விளையாட்டு

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹிர் கான் நியமனம்

வேட்டையன்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாஹிர் கான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடன் நீண்ட நெடுங்காலம் பயிற்சியாளராக பயணித்தவர் ஸ்டீபன் பிளெமிங். கடந்த ஜூலை மாதம் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அவர் விலகினார். தற்போது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகி உள்ளார்.

இந்நிலையில், சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அந்த அணியின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்திருந்தது. வெளிநாட்டை சேர்ந்தவரா அல்லது உள்நாட்டை சேர்ந்தவரா? என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில், இன்று (செப்.21) தங்கள் அணியின் புதிய பயிற்சியாளரை அறிவித்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.

கடந்த 2011-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய அங்கம் வகித்த ஜாஹிர் கானை அடுத்த பயிற்சியாளராக சிஎஸ்கே அறிவித்துள்ளது. 100 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி உள்ளார் ஜாஹிர் கான்.

ஓய்வுக்கு பின்னர் இந்திய அணியின் பந்துவீச்சு ஆலோசகர், ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குனர், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

“ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக அறியப்படும் சிஎஸ்கே உடன் பயணிப்பது சிறந்த கவுரவுமாக கருதுகிறேன். கிரிக்கெட் வீரராக களத்தில் சிஎஸ்கே அணியை நான் எதிர்கொண்டுள்ளேன். அதை நான் அனுபவித்தது உண்டு. சென்னை - சேப்பாக்கத்தில் ரசிகர்களின் சூழல் மிகவும் ஸ்பெஷல். அதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்” என்று ஜாஹிர் கான் தெரிவித்துள்ளார்.

“ஜாஹிர் கான், சர்வதேச தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். இளம் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு வழிகாட்டி உள்ளார். சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர். இந்தியாவின் பல வெற்றிகளுக்கு வித்திட்டவர். அவர் எங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி” என சிஎஸ்கே அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT