விளையாட்டு

சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் இடையே 4 வீரர்கள் பரிமாற்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐபிஎல் 2027-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்களை தக்க வைக்கும் நடவடிக்கையிலும், வெளியேற்றும் நடவடிக்கையிலும், டிரேடிங் முறையில் மாற்றிக்கொள்ளும் முறையிலும் அணிகளின் உரிமையாளர்கள் களமிறங்கி உள்ளனர். வீரர்கள் தக்கவைப்புக்கான காலக்கெடு வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மினி ஏலத்துக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே 4 வீரர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோர் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளனர்.

இவர்களுக்கு மாற்றாக சிஎஸ்கே அணியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நேதன் எல்லிஸ் ஆகியோர் சன்ரைசர்ஸ் அணிக்கு மாறியுள்ளனர்.

லிவிங்ஸ்டனை ரூ.13 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்த சன்ரைசர்ஸ் அணி, தற்போது அவரை ரூ.6 கோடிக்கு சிஎஸ்கேவுக்கு வழங்கியுள்ளது. ஜாக் எட்வர்ட்ஸ் தனது ரூ.3 கோடி ஒப்பந்தத் தொகையிலேயே சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். கலீல் அகமது ரூ.4.8 கோடி, நேதன் எல்லிஸ் ரூ.2 கோடி என்ற அவர்களது தற்போதைய ஒப்பந்தத் தொகையிலேயே சன்ரைசர்ஸ் அணிக்கு மாறியுள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT