ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: 6-வது முறையாக இந்தியா சாம்பியன்

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: 6-வது முறையாக இந்தியா சாம்பியன்
Updated on: 
1 min read

மொகாலி: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா - ஜப்பான் அணிகள் மொகாலியில் மோதின. இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய அணி தரப்பில் ஷில்லானந்த் லக்ரா (41-வது நிமிடம்), தில்பிரீத் சிங் (47-வது நிமிடம்), ஜுக்ராஜ் சிங் (52-வது நிமிடம்), விவேக் சாகர் பிரசாத் (53-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஜப்பான் அணி சார்பில் கசுமாசா மாட்சுமோட்டோ 2-வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி பட்டம் வெல்வது இது 6-வது முறையாகும்.

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: 6-வது முறையாக இந்தியா சாம்பியன்
2-வது டெஸ்ட் போட்டி: சதம் விளாசி அணியை மீட்டார் அமிர் ஜாங்கூ

X