விளையாட்டு

600 விக்கெட்களை வீழ்த்தி சுனில் நரேன் சாதனை

செய்திப்பிரிவு

அபுதாபி: டி 20 கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்களை வீழ்த்திய 3-வது பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த சுனில் நரேன்.

புதிர் சுழற்பந்து வீச்சாளரான அவர், தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் ஐஎல்டி 20 லீக்கில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரேன், டாம் அபேல் விக்கெட்டை வீழ்த்தினார்.

இது டி20 கிரிக்கெட்டில் அவர், கைப்பற்றிய 600-வது விக்கெட்டாக அமைந்தது. இந்த வகை சாதனையில் ரஷித் கான் (681), டுவைன் பிராவோ (631) ஆகியோருடன் சுனில் நரேன் இணைந்துள்ளார்.

SCROLL FOR NEXT