விளையாட்டு

திருச்​செங்​கோட்​டில் கிரிக்​கெட் பயிற்சி மையம் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: திருச்​செங்​கோட்​டில் புதிய கிரிக்​கெட் பயிற்சி மையத்தை சூப்​பர் கிங்ஸ் அகாடமி தொடங்​கி​யுள்​ளது.

சென்னை சூப்​பர் கிங்ஸ் ஐபிஎல் அணி நிர்​வாகம் சார்​பாக சூப்​பர் கிங்ஸ் கிரிக்​கெட் அகாடமி தொடங்​கப்​பட்டு இளம் வீரர்​களுக்கு பயிற்சி அளிக்​கப்​பட்டு வரு​கிறது. தமிழகத்​தில் இளம் வயதில் உள்ள திறமை​யான வீரர்​களை கண்​டறிந்து அவர்​களுக்கு பயிற்சி அளிக்​கும் நோக்​கத்​தில் இந்த அகாடமி பல பயிற்சி மையங்​களை பல்​வேறு நகரங்​களில் தொடங்கி வரு​கிறது.

அதன்​படி திருச்​செங்​கோட்​டிலுள்ள கேஎஸ்​ஆர் கல்வி நிறுவன வளாகத்​தில் புதிய பயிற்சி மையத்தை சூப்​பர் கிங்ஸ் அகாடமி தொடங்​கி​யுள்​ளது. இதன்​மூலம் தமிழகத்​தில் 12-வது பயிற்சி மையத்தை அகாடமி தொடங்​கி​யுள்​ளது. உலக அளவில் சூப்​பர் கிங்ஸ் அகாட​மி​யால் தொடங்​கப்​படும் 35-வது மைய​மாகும் இது. இந்த பயிற்சி மையத்​தில் சேர விரும்​புவோர் www.superkingsacademy.com என்ற இணை​ய தளத்​தைத் தொடர்​பு​கொள்​ளலாம்.

வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் இங்கு பயிற்​சிகள் தொடங்​க​வுள்ளன என்று சூப்​பர் கிங்ஸ் அகாடமி தெரி​வித்​துள்​ளது. இந்த மையத்​தில் திறமை​யான பயிற்​சி​யாளர்​கள், உதவி​யாளர்​கள் அமர்த்​தப்​பட்​டுள்​ளனர். மேலும் பயிற்சி மையத்​தில் 2 டர்ஃப் ஆடுகளங்​களும், 2 அஸ்ட்ரோ டர்ஃப் ஆடு​களங்​களும், 3 மேட்​டிங் ஆடு​களங்​களும், 2 மைதானங்​களும் உள்ளன. பவுலிங் மெஷின், இரவு நேரத்​தில் பயிற்சி பெறும் வசதி​களும் இங்கு அமைந்துள்ளன என்று அகாடமி வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT