விளையாட்டு

பாஜகவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் சஹல்

வேட்டையன்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சஹல், பாஜகவில் இணைந்துள்ளார். இது குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

பாஜகவின் ஓபிசி பிரிவின் தேசிய செயற்குழுவில் சிறப்பு அழைப்பாளராக அவர் இணைந்துள்ளார். அவரோடு மேலும் இரண்டு சிறப்பு அழைப்பாளர்கள் (ஓபிசி பிரிவு), 37 தேசிய செயற்குழு உறுப்பினர்கள், 7 தேசிய துணைத் தலைவர்கள், 3 தேசிய பொதுச் செயலாளர்கள் மற்றும் 7 தேசிய செயலாளர்களை அந்த கட்சி அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2016-ல் சர்வதேச கிரிக்கெட்டில் சஹல் அறிமுகமாகி இருந்தார். 72 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 121 விக்கெட்டுகளும், 80 டி20 போட்டிகளில் 96 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 2019-ல் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 200+ விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக அப்போது அவர் தெரிவித்திருந்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT