சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கான (டிஎன்சிஏ) புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக டிஎன்சிஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: டிஎன்சிஏ சார்பில் பயிற்சியாளர்களை கிரிக்கெட் ஆலோசனைக் குழு(சிஏசி) தேர்வு செய்துள்ளது.
அதன்படி சீனியர் வீரர்களுக்கான தலைமைப் பயிற்சியாளராக யோ மகேஷும், உதவி பயிற்சியாளர்களாக ஆர்.ஸ்ரீநிவாசன், ஜே.ஹரீஷ் ஆகியோரும், 14 வயது முதல் 23 வயதுக்குட்பட்டோர் பிரிவுக்கு வி.ஆர்.எஸ்.குருகேதார்நாத், வி.மாருதி ராகவ், தினேஷ், டி.ஆர்.மாதவன், சி.எஸ்.சந்தோஷ், ஆர்.தருண், அஸ்வின் வெங்கட்ராமன், பி.ராகுல் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் பிரிவுக்கு ஆரத்தி சங்கரன், நிரஞ்சனா, பாபி குலேச்சா, சுகராகமினி, அசோக் ஆனந்த், டி.காவ்யா, நீலோபர் பிர்தவுஸ், எஸ்.காயத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.