விளையாட்டு

ஹைதி அணியின் சீருடையில் சர்ச்சை | FIFA WC 2026

செய்திப்பிரிவு

போர்ட் ஆவ் பிரின்ஸ்: உலகக் கோப்பை கால்பந்துப் போட்​டி​யில் பங்​கேற்​றுள்ள ஹைதி கால்பந்து அணி வீரர்​களின் சீருடை​யில் அந்​நாட்​டின் சுதந்​திரப் போர் தொடர்​பான படம் இடம்பெற்றிருந்தது.

இதற்கு உலக கால்​பந்து சம்​மேளனம் ​(பிஃ​பா) ஆட்​சேபம் தெரிவித்த​தால் சட்​டையி​லிருந்த புகைப்​படம் நீக்​கப்​பட்​டுள்​ளது. உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்டி நேற்று அமெரிக்​கா, கனடா, மெக்​ஸிகோ ஆகிய 3 நாடு​களில் தொடங்​கியது. இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்க கரீபியன் நாடு​களில் ஒன்​றான ஹைதி​யும் தகுதி பெற்​றுள்​ளது.

ஹைதி வீரர்​கள் அணிந்​திருந்த சட்​டை​யில், ஹைதி நாட்​டின் சுதந்திரப் போர் தொடர்​பான புகைப்​படம் இடம்​பெற்​றிருந்​தது. இது பிஃ​பா​வின் விதி​களை மீறிய செயல் என்று ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து சட்​டையி​லிருந்த புகைப்படத்தை நீக்​கி​விட்டு புதிய சட்டை தயாரிக்​கப்​பட்டு வீரர்​களுக்கு வழங்​கப்​பட்​டது.

ஹைதி வீரர்​களுக்கு கொலம்​பி​யா​வைச் சேர்ந்த விளை​யாட்டு உபகரணங்​கள், சட்​டை, கால் சட்​டைகள் தயாரிக்​கும் நிறுவனமான சயேட்டா நிறு​வனம் தயாரித்​துள்​ளது. இதுதொடர்பாக சயேட்டா வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறும்​போது, “ஹைதி வீரர்​களுக்​கான கால்​பந்து சீருடையை, ஹைதி கால்​பந்து சம்​மேளனத்​துடன் இணைந்து உருவாக்கினோம்.

ஹைதி மக்​களின் பெரு​மை, மன உறுதி மற்​றும் மனப்​பான்மை ஆகிய​வற்றை கொண்​டாடும் வித​மாக தயாரிக்​கப்​பட்​டது. இதற்​கு பிஃ​பா ஆட்​சேபம்​ தெரி​வித்​த​தால்​ அதை ​மாற்​றி விட்​டோம்​” என்​று கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT