விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: 32 பேர் கொண்ட இந்திய அணி​யில் இடம்பெற்றார் நீரஜ் சோப்ரா

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி​யில் பங்கேற்கவுள்ள 32 பேர் கொண்ட அணியை இந்​திய தடகள சம்மேளனம் அறி​வித்​துள்​ளது. இதில் காயம் காரண​மாக விளையா​டா​மல் இருக்​கும் நீரஜ் சோப்ரா இடம் பிடித்​துள்​ளார்.

காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்டி ஸ்காட்​லாந்​தில் உள்ள கிளாஸ்​கோ​வில் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்க உள்ள இந்​திய வீரர், வீராங்​க​னை​களைத் தேர்​வுக்​கான கூட்​டம் இந்​திய தடகள சமமேளன வளாகத்​தில் நடை​பெற்​றது. தேர்வு குழு​வின் ஆலோ​சனைக்​குப் பின்​னர் 32 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்​ளது.

இதில் ஈட்டி எறிதல் போட்​டி​யில் 2 முறை ஒலிம்​பிக்​கில் பதக்​கம் வென்ற நீரஜ் சோப்ரா இடம் பிடித்​துள்​ளார். இவர் கடந்த 2025-ம் ஆண்டு உலக சாம்​பியன்​ஷிப் போட்​டிக்கு பின்​னர் எந்த போட்டியிலும் பங்​கேற்​க​வில்​லை. முதுகு வலி காரண​மாக அவர் அவதிப்​பட்டு வந்​துள்ள நிலை​யில் அவர் போட்​டி​யில் பங்கேற்காமல் இருந்​தார். தற்​போது அவர் குணமடைந்து வரும் நிலை​யில் அணி​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். கிளாஸ்கோ போட்டிக்குள் அவர் முழு​மை​யாக தேறி​விடு​வார் என தடகள சம்​மேளனம் தெரி​வித்​துள்​ளது.

இந்​திய அணி​யில் குரிந்​தர் வீர் சிங் (100மீட்​டர் ஓட்​டம்), அனிமேஷ் குஜுர் (200மீட்​டர்), குல்​வீர் சிங் (5000மீ. 10,000மீட்​டர்), தேஜஸ்​வின் ஷங்​கர் (டெகத்​லான் மற்​றும் உயரம் தாண்​டு​தல்), பாருல் சவுத்ரி (3000மீட்​டர் ஸ்டீபிள்​சேஸ்), தேஜாஸ் அசோக் சிர்​சே, யஷாஸ் பி, சந்​தோஷ்கு​மார் தமிழரசன், சர்​வேஷ் அனில் குஷாரே, ஆதர்ஷ் ராம், தேவ் மீனா, குல்​தீப் குமார், ஸ்ரீசங்​கர், லோகேஷ் சத்​ய​நாதன், பிர​வீண் சித்​ர​வேல், செல்​வப்​பிரபு, சமர்​தீப் சிங் கில், தஜிந்​தர்​பால் சிங் தூர், ரோஹித் யாதவ், யஷ்வீர் சிங், டி.கே.​விஷால் உள்ளிட்டோரும் அணி​யில் இடம் பிடித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT